போதைப் பழக்கங்களுக்கு அடிமையாகிவிடாதீர்கள்: இளைஞர்களுக்கு பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் அறிவுரை

Bookmark and Share

போதைப் பழக்கங்களுக்கு அடிமையாகிவிடாதீர்கள்: இளைஞர்களுக்கு பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் அறிவுரை

போதைப் பொருட்களில் இருந்து இளைஞர்கள் விலகியிருக்க வேண்டும், அவற்றுக்கு ஒருபோதும் அடிமையாகிவிடக் கூடாது என பிரபல பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

ஜாக்குலின் பெர்னாண்டஸ், சித்தார்த் மல்ஹோத்ரா ஆகியோருடன் தானும் இணைந்து நடித்துள்ள 'பிரதர்ஸ்' திரைப்படம் பற்றிய கலந்துரையாடல் நிகழ்சியின் போது ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜலந்தர் நகரில் உள்ள லவ்லி புரோபஷனல் பல்கலைக்கழகத்தில் இந்த கருத்தை அவர் தெரிவித்தார். 

நாட்டின் வளர்ச்சிக்கு இன்று மிகப்பெரிய தடையாக இருப்பது போதை பொருட்கள்தான். ஆரம்பத்தில் விளையாட்டாக போதைப் பொருட்களை இளைஞர்கள் பயன்படுத்துகின்றனர்.

பின்னர், நாளடைவில் அதற்கு அடிமையாகி விடுகின்றனர் என்று அவர் கூறினார். மேலும், தான் ஒருபோதும் போதைப் பொருட்களை பயன்படுத்தியது கிடையாது, காபி, டீயைக் கூட குடிப்பதில்லை என்றும் அக்‌ஷய் குமார் தெரிவித்துள்ளார்.

நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கவும், வாழ்க்கையில் ஒழுக்கத்தை கடைபிடிக்கவும் இளைஞர்களுக்கு அவர் அறிவுரை வழங்கியுள்ளார்.


Post your comment





Related News
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
சவூதியில் வெளியாகும் முதல் இந்திய படம் என்ற பெருமையை பெற்ற அக்‌ஷய் குமாரின் கோல்ட்
இதுவரை சிவகுமார் ஆற்றிய உரைகளிலேயே ஆகச்சிறந்த உரை இதுதான் என்றே சொல்லவேண்டும்..!
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!
மேயாத மான் இயக்குனருடன் இணையும் அமலாபால்..!
இணைய தளத்தை கலக்கும் "இமைக்கா நொடிகள்" படத்தின் விளம்பர இடைவெளி பாடல்..!
“காவியனுக்கு போட்டியாக “சர்கார்“
சசிகுமார், ராஜமௌலி சந்திப்பு இதற்கு தானா? வரலாற்று படத்தில் விஜய் நடிப்பது உண்மையா..?
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions