இந்தி நடிகர்கள் சம்பள பட்டியல்: சல்மான்கான் ரூ.50 கோடி; அக்‌ஷய்குமார் ரூ.45 கோடி- அமீர்கான் ரூ.40 கோடி

Bookmark and Share

இந்தி நடிகர்கள் சம்பள பட்டியல்: சல்மான்கான் ரூ.50 கோடி; அக்‌ஷய்குமார் ரூ.45 கோடி- அமீர்கான் ரூ.40 கோடி

இந்தி கதாநாயகர்களின் சம்பள பட்டியல் வெளியாகியுள்ளது. ஒரு படத்தை இந்தி நடிகர்கள் மூன்று நான்கு மாதத்தில் முடித்து விடுகின்றனர். இதற்காக இவர்கள் வாங்கும் கோடிகள் மிக மிக அதிகம் என்கின்றனர் இந்தபட உலகினர்.

நடிகர்களின் சம்பள பட்டியலில் சல்மான்கான் முதல் இடத்தில் இருக்கிறார். ஒரு படத்துக்கு இவர் வாங்கும் சம்பளம் ரூ.50 கோடி. இளம் கதாநாயகர்கள் பலர் வந்து இருந்தாலும் சல்மான்கான் மார்க்கெட் கொஞ்சமும் சரியவில்லை. 50 வயதை எட்டிய பிறகும் கூட முன்னணி நடிகராகவே வலம் வருகிறார். இவரது படங்கள் வசூலை குவிக்கின்றன. கமர்ஷியல் பட நடிகர் என்ற ‘இமேஜை’ தக்க வைத்துள்ளார்.

அக்‌ஷய்குமார் ஒரு படத்துக்கு ரூ.45 கோடி சம்பளம் வாங்கி இரண்டாவது இடத்தில் இருக்கிறார். இவரை இந்தி பட உலகில் ‘கலெக்‌ஷன் கிங்’ என வர்ணிக்கிறார்கள். ‘மினிமம் கேரன்டி’ என்றும் தயாரிப்பாளர்களிடம் பெயரெடுத்து உள்ளார்.

அமீர்கான் ரூ.40 கோடி சம்பளம் பெற்று மூன்றாவது இடத்தில் இருக்கிறார். தொடர்ந்து கமர்சியல் படங்களில் நடித்து வருகிறார். இவரது படங்களும் வசூல் குவிக்கின்றன. பாலிவுட் பாஷா என அழைக்கப்படும் ஷாருக்கான் ரூ.35 கோடி சம்பளம் வாங்குகிறார். இவர் படங்களும் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடுகின்றன.

அஜய் தேவ்கானும் ரூ.35 கோடி சம்பளம் பெறுகிறார். இவர் சமீபத்தில் நடித்த ‘சிங்கம்’ படம் வெற்றிகரமாக ஓடின. ஹிருத்திக் ரோஷன் ரூ.25 கோடி சம்பளம் வாங்குகிறார். இவரது படங்களுக்கு பெண்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது. ரன்பீர் கபூர் ரூ.20 கோடி சம்பளம் பெறுகிறார்.


Post your comment





Related News
சவூதியில் வெளியாகும் முதல் இந்திய படம் என்ற பெருமையை பெற்ற அக்‌ஷய் குமாரின் கோல்ட்
ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..?
பணம் செல்லாமைக்குப் பின், சினிமா நாசம், விவசாயம் நாசம், எல்லாம் நாசம். இது தான் மத்திய அரசின்" மேக் இன் இண்டியா" திட்டமா?" படித்தவுடன் கிழித்து விடவும்" ஆடியோ விழாவில் மன்சூரலிகான் அதிரடி கேள்வி!
பாலிவுட் ஹீரோவுடன் பா.ரஞ்சித்தின் அடுத்த படம்?
என் ஓட்டு இவருக்குதான்! பிக்பாஸ் பற்றி பேசிய நடிகர் பிரபு
ரஜினி, விஜய் அரசியலை தாண்டி அஜித் வந்தால் இப்படி ஆகிவிடும்- பிரபலத்தின் ஹாட் டாக்
பிரபல நடிகருக்கு ஜோடியாகும் நாகினி சீரியல் கவர்ச்சி நடிகை!
தமிழ்நாட்டின் குழந்தைகளும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions