தயாரிப்பாளர் ஆனார் அக்ஷயா

Bookmark and Share

தயாரிப்பாளர் ஆனார் அக்ஷயா

கோவில்பட்டி வீரலட்சுமி படத்தில் சிறிய கேரக்டரில் அறிமுகமானவர் அக்ஷயா. கலாபக்காதலன் படத்தில் ஆர்யா ஜோடியாக நடித்து புகழ் பெற்றார். பழனியப்பா கல்லூரி, உளியின் ஓசை, கஜா, எங்கள் ஆசான், உயர்திரு 420 படங்களில் நடித்தார் அதன் பிறகு நண்பர்களுடன் இணைந்து ஆல்பங்கள் தயாரித்து வெளியிட்டார்.

சில காலமாக சினிமாவில் காணாமல் இருந்த அக்ஷயா தற்போது தயாரிப்பாளராகி இருக்கிறார். யாளி என்ற படத்தை அவர் தயாரித்து, ஹீரோயினாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக அர்ஜூன் என்ற புதுமுகம் நடிக்கிறார்.

இது ஹீரோயினுக்கு முக்கியத்தும் உள்ள ஒரு கதை. அக்ஷயா நடித்த 50க்கும் ஆசை வரும், மன்மத ராஜ்யம், பட்டிக்காட்டு மாப்பிள்ளை, தசையினை தீச்சுடினும் ஆகிய படங்கள் எதுவும் வெளிவரவில்லை.

புதிய பட வாய்ப்புகளும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் தானே புதிய படத்தை தயாரிக்க முடிவு செய்துவிட்டார். தனது மலேசிய நண்பர்கள் சிலருடன் இணைந்து தயாரிப்பதாக கூறப்படுகிறது. இந்தப் படம் தனது திறமைக்கு தீனி போடும் படமாக அமையும் என்றும் அவர் நம்புகிறார்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions