ராதாபாரதி இயக்கத்தில் செங்குட்டுவன் - அக்ஷயா நடிக்கும் “ நண்பர்கள் நற்பணி மன்றம் “

Bookmark and Share

ராதாபாரதி இயக்கத்தில் செங்குட்டுவன் - அக்ஷயா நடிக்கும் “ நண்பர்கள் நற்பணி மன்றம் “

ஸ்ரீ அண்ணாமலையார் மூவீஸ் என்ற பட நிறுவனம் சார்பாக சி.மாதையன் தயாரிக்கும் படம் “நண்பர்கள் நற்பணி மன்றம்” இந்த படத்தில் செங்குட்டுவன் கதாநாயகனாக நடிக்கிறார்.

கதாநாயகியாக அக்ஷயா நடிக்கிறார். மற்றும் கே.பிரபாகரன், இமான் அண்ணாச்சி, ஆடுகளம் நரேன், சிங்கம்புலி, நான்கடவுள் ராஜேந்திரன், ரவிமரியா, முத்துகாளை, மகேந்திரன், நெல்லை சிவா, கூல் சுரேஷ், சார்மிளா, ராதா, ஜார்ஜ் மரியான் ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு - செல்வா.ஆர்.எஸ் / இசை - ஸ்ரீகாந்த்தேவாபாடல்கள் - நா.முத்துகுமார், யுகபாரதி, ரவிபாரதி, கவிபாஸ்கர்.கலை - பத்மநாபகதிர் / எடிட்டிங் - லான்சிமோகன் / நடனம் - சஞ்சீவ்கண்ணா, ஸ்டன்ட் - மிரட்டல்செல்வா / தயாரிப்பு நிர்வாகம் - ரஞ்சித், பழனியப்பன் நிர்வாக தயாரிப்பு - குமரன்தயாரிப்பு - C.மாதையன்கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ராதாபாரதி.

படம் பற்றி இயக்குனர் ராதாபாரதியிடம் கேட்டோம்.....

இது நட்பு, காதல் இரண்டையும் மையப்படுத்தி உருவாக்கி உள்ளோம். சமீபத்தில் இந்த படத்திற்காக நட்பை மையப்படுத்தி “அண்ணன் தம்பிய கூப்பிட்டுப்பாரு”அக்காவையும் கூப்பிட்டுப்பாருமாமன் மச்சான கூப்பிட்டுப்பாருமாப்பிள்ளையையும் கூப்பிட்டுப்பாருசொந்த பந்தத்தையும் கூப்பிட்டுப்பாருஉதவின்னு கேட்டுப் பாரு யாரு வருவாங்கன்னு கேட்டுப் பாரு? நண்பன கூப்பிட்டு பாரு! உயிரையே கொடுப்பான் பாரு “ என்ற பாடல் காட்சியில் நாயகன் செங்குட்டுவன் ஆடிப்பாட படமாக்கப் பட்டது.

கலகலப்பான படமாக நண்பர்கள் நற்பணி மன்றம் உருவாகி உள்ளது. விரைவில் இப்படம் திரைக்கு வர உள்ளது என்றார் ராதாபாரதி.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions