அக்ஷயா தயாரித்து நடிக்கும் யாளியில் தமன் ஹீரோ

Bookmark and Share

அக்ஷயா தயாரித்து நடிக்கும் யாளியில் தமன் ஹீரோ

கலாபக்காதலன், உளியின் ஓசை, உயர்திரு 420 உள்பட பல படங்களில் நடித்தவர் அக்ஷயா. சில காலம் சினிமாவை விட்டு ஒதுங்கி ஆல்பங்கள் தயாரித்துக் கொண்டிருந்த அக்ஷா இப்போது சினிமா தயாரிக்கிறார். அவர் எழுதிய யாளி என்ற கதை திரைப்படமாகிறது. நடன இயக்குனர் காதல் கந்தாஸ் இயக்குகிறார்.

அக்ஷயா ஹீரோயினாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக சட்டம் ஒரு இருட்டறை, தொட்டால் தொடரும் படங்களில் நடித்த தமன் குமார் நடிக்கிறார். இவர்களுடன் காமெடிக்கு அர்ஜூன் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். ஊர்வசி முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். மோகன்ராம் இசை அமைக்கிறார், பாடல்களை வைரமுத்து எழுதுகிறார். சீனிவாச ராமய்யா ஒளிப்பதிவு செய்கிறார்.

"இது எனது நீண்ட நாள் கனவு, என் மனதில் இருந்த கதை. நானே இயக்கலாம் என்று இருந்தேன். நடித்துக் கொண்டே இயக்குவது சிரமம் என்பதால் எனது நண்பர் காதல் கந்தாஸ் இயக்குகிறார். முழுப் படமும் மலேசியாவில் உள்ள பினாங்கு, மலாக்கா, லங்காவி, டாப்பிங், ஜெண்டிங், கோலாலம்பூர் பகுதிகளில் நடக்கிறது. வருகிற 27ந் தேதி முதல் படப்படிப்பு தொடங்குகிறது. ஒரே ஷெட்யூலில் படத்தை முடித்து விட்டுத் திரும்புகிறோம்" என்றார் அக்ஷயா.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions