மெய்க்காவலரால் ரசிகர் தாக்கப்பட்ட விவகாரம்: மன்னிப்பு கேட்ட அக்ஷய் குமார்!

Bookmark and Share

மெய்க்காவலரால் ரசிகர் தாக்கப்பட்ட விவகாரம்: மன்னிப்பு கேட்ட அக்ஷய் குமார்!

இந்தி நடிகர் அக்ஷய் குமார் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘2.0’ படத்தில், வில்லன் வேடத்தில் நடிக்கிறார்.

இந்த நிலையில், சமீபத்தில் அக்ஷய் குமார் மும்பை விமான நிலையத்தில் நடந்து சென்றபோது, அவரை பார்க்க ரசிகர்கள் பட்டாளம் திரண்டது. அப்போது ஏற்பட்ட களேபரத்தில், ரசிகர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதனால், அக்ஷய் குமாரின் மெய்க்காவலர் ஒருவர், ரசிகரின் மூக்கில் ‘பஞ்ச்’ ஒன்றுவிட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து, தன்னுடைய மெய்க்காவலரின் இந்த செயலுக்காக, தான் வருந்துவதாகவும், குறிப்பிட்ட அந்த ரசிகரிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோருவதாகவும் டுவிட்டர் வலைதளத்தில் நடிகர் அக்ஷய் குமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறி இருப்பதாவது:–

என்னுடைய ரசிகர் மீது தாக்குதல் நடத்தியதை துரதிருஷ்டவசமாகவும், விரும்பத்தகாததாகவும் கருதுகிறேன். குறிப்பிட்ட நாளில் நான் விமான நிலையத்தில் நடந்து சென்றபோது, கூச்சல், குழப்பம் நிலவியது.

இருந்தாலும், நான் அதனை தவறாக எடுத்து கொள்ளவில்லை. என்னுடைய ரசிகர் ஒருவர், எனது மெய்க்காவலரால் தாக்கப்பட்டது பற்றி பின்னர் தான் எனக்கு தெரியவந்தது.

குறிப்பிட்ட அந்த மெய்க்காவலரை அழைத்து வன்மையாக கண்டித்ததுடன், எச்சரித்தும் அனுப்பினேன். அவர் தாக்கியதில், காயம் அடைந்த ரசிகரிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

நான் என்னுடைய ரசிகர்களை உயர்வான இடத்தில் வைத்திருக்கிறேன். இதுபோன்ற சம்பவங்கள் என்னை மிகவும் பாதிக்கின்றன. எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வண்ணம் உறுதியளிக்கிறேன்.

இவ்வாறு அதில் அக்ஷய் குமார் தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News
சசிகுமார் படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்த சமுத்திரகனி
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
பழம்பெரும் இந்தி நடிகர் திலிப் குமார் ஆஸ்பத்திரியில் அனுமதி
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
சவூதியில் வெளியாகும் முதல் இந்திய படம் என்ற பெருமையை பெற்ற அக்‌ஷய் குமாரின் கோல்ட்
இதுவரை சிவகுமார் ஆற்றிய உரைகளிலேயே ஆகச்சிறந்த உரை இதுதான் என்றே சொல்லவேண்டும்..!
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!
மேயாத மான் இயக்குனருடன் இணையும் அமலாபால்..!
இணைய தளத்தை கலக்கும் "இமைக்கா நொடிகள்" படத்தின் விளம்பர இடைவெளி பாடல்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions