மகாராஷ்டிராவில் வறட்சி காரணமாக நடிகர் அக்‌ஷய் குமார் 50 லட்சம் நிதியுதவி!

Bookmark and Share

மகாராஷ்டிராவில் வறட்சி காரணமாக நடிகர் அக்‌ஷய் குமார் 50 லட்சம் நிதியுதவி!

மகாராஷ்டிராவில் உள்ள 43,000 கிராமங்களில் சுமார் 27,723 கிராமங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தில் 75 அணைகளில் 54 அணைகளில் முற்றிலுமாக நீர் வற்றிவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மற்றும் பொது மக்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். 

இந்நிலையில், பாலிவுட் நட்சத்திரங்களில் பலரும் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிதியுதவி வழங்கி வருகின்றனர்.  நடிகர்கள் அமிர்கான், நானா படேகர் உள்ளிட்டோரை தொடர்ந்து நடிகர் அக்‌ஷய் குமார் ரூ.50 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநில அரசின் ஜல்யுக்த் ஷிவர் அபியான் எனும் அமைப்பிற்கு நிதியுதவி வழங்கியுள்ளார். வறட்சியால் வாடும் கிராமங்களில் நீர் நிலைகளை உருவாக்குவது, குளம் அமைப்பது போன்ற பணிகளில் இந்த அமைப்பு ஈடுபட்டு வருகிறது.

இதற்கு முன்பாக தற்கொலை செய்து கொண்ட 180 விவசாயிகளின் குடும்பத்தினருக்கு உதவும் வகையில் அக்‌ஷய் குமார் ரூ.90 லட்சம் நிதியுதவி அளித்தது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
சவூதியில் வெளியாகும் முதல் இந்திய படம் என்ற பெருமையை பெற்ற அக்‌ஷய் குமாரின் கோல்ட்
இதுவரை சிவகுமார் ஆற்றிய உரைகளிலேயே ஆகச்சிறந்த உரை இதுதான் என்றே சொல்லவேண்டும்..!
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!
மேயாத மான் இயக்குனருடன் இணையும் அமலாபால்..!
இணைய தளத்தை கலக்கும் "இமைக்கா நொடிகள்" படத்தின் விளம்பர இடைவெளி பாடல்..!
“காவியனுக்கு போட்டியாக “சர்கார்“
சசிகுமார், ராஜமௌலி சந்திப்பு இதற்கு தானா? வரலாற்று படத்தில் விஜய் நடிப்பது உண்மையா..?
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions