எந்திரன்-2 படப்பிடிப்பில் இணைந்த அக்ஷய்குமார்!

Bookmark and Share

எந்திரன்-2 படப்பிடிப்பில் இணைந்த அக்ஷய்குமார்!

‘எந்திரன்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் ஷங்கர் மீண்டும் ரஜினியை வைத்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கத் தொடங்கவிட்டார். இப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

‘கபாலி’ படப்பிடிப்பிற்காக இப்படத்திற்கு சற்று இடைவெளிவிட்ட ரஜினி தற்போது மீண்டும் இதில் இணைந்திருக்கிறார். இந்நிலையில், இப்படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார், தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் கலந்துகொள்ளவிருக்கிறார். 

இதற்காக அக்ஷய்குமார் தற்போது சென்னை வந்துள்ளார். சென்னைக்கு வந்த அக்ஷய்குமாருக்கு படக்குழுவினர் சிறப்பான வரவேற்பு கொடுத்துள்ளனர். விரைவில், தொடங்கவிருக்கும் 2.0 படப்பிடிப்பில் அக்ஷய்குமார் கலந்துகொள்ளவிருக்கிறார். 

இப்படத்தின் கதாநாயகியாக எமி ஜாக்சன் நடித்து வருகிறார். லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.


Post your comment





Related News
என்னுடன் நடித்ததிலேயே சிறந்த தொழில்முறை நடிகை இவள் தான் - வரலட்சுமி
சசிகுமார் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்த கதையில் சூர்யா
சசிகுமார் படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்த சமுத்திரகனி
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
பழம்பெரும் இந்தி நடிகர் திலிப் குமார் ஆஸ்பத்திரியில் அனுமதி
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
சவூதியில் வெளியாகும் முதல் இந்திய படம் என்ற பெருமையை பெற்ற அக்‌ஷய் குமாரின் கோல்ட்
இதுவரை சிவகுமார் ஆற்றிய உரைகளிலேயே ஆகச்சிறந்த உரை இதுதான் என்றே சொல்லவேண்டும்..!
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions