மீண்டும் விஜய்யுடன் கைகோர்க்கும் ஆர்யா

Bookmark and Share

மீண்டும் விஜய்யுடன் கைகோர்க்கும் ஆர்யா

இயக்குனர் விஜய்-ஆர்யா கூட்டணி இணைந்து ஏற்கெனவே ‘மதராசபட்டணம்’ என்ற மாபெரும் வெற்றி படத்தை தந்தனர். தற்போது, இவர்கள் கூட்டணி மீண்டும் ஒரு படத்தில் இணையப் போவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

ஆர்யா தற்போது ராஜேஷ் இயக்கும் ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’ படத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல், பிவிபி சினிமாஸ் தயாரிக்கும் சைஸ் ஜீரோ என்ற படத்திலும் நடிக்கவிருக்கிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக அனுஷ்கா ஷெட்டி நடிக்கிறார். அதுதவிர, இவர் நடிப்பில் உருவாகியுள்ள ‘புறம்போக்கு’ படமும் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது.

விஜய்யும் தற்போது விக்ரம் பிரபுவை வைத்து ‘இது என்ன மாயம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் கிட்டத்தட்ட முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்றுவிருக்கிறது. இருவரும் தங்களது படங்களை முடித்துவிட்டு புதிய படத்தில் இணைவார்கள் என தெரிகிறது.


Post your comment





Related News
முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்
விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா
விஷால் படத்தில் சன்னி லியோன்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்
மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல்
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
பொது மேடையில் காஜல் அகர்வாலை முத்தமிட்ட ஒளிப்பதிவாளர்
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை தெரியாமல் இருக்க நான் முட்டாள் இல்லை - ரஜினிகாந்த்
18 கிலோ மீட்டர் பின் தொடர்ந்து வந்த ரசிகரை நெகிழ வைத்த அஜித்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions