தமிழில் மொழிமாற்றம் செய்ய பட அதிபர்கள் ஆர்வம்: டைரக்டர் விஜய்

Bookmark and Share

தமிழில் மொழிமாற்றம் செய்ய பட அதிபர்கள் ஆர்வம்: டைரக்டர் விஜய்

மலையாளத்தில் வெற்றி பெற்ற ‘ஷட்டர், மெமரீஸ். பெங்களூர் டேஸ்’ உள்ளிட்ட பல படங்கள் தமிழில் தயாராகின்றன.

‘ஷட்டர்’ படத்தை டைரக்டர் விஜய் தமிழில் வெளியிடுகிறார். இதில் சத்யராஜ், யூகிசேது, வருண், அனுமோள், ஆர்.சுந்தரராஜன். கல்யாணி நடராஜன், தீக்ஷிதா ஆகியோர் நடிக்கின்றனர். ஆண்டனி டைரக்டு செய்கிறார்.

ஏ.எல்.அழகப்பன், சாம் பால் ஆகியோர் தயாரிக்கின்றனர். தமிழில் கதைபஞ்சம் ஏற்பட்டதால் தான் மலையாள படங்கள் தமிழில் மொழிமாற்றம் செய்யப்படுகிறதா? என்று டைரக்டர் விஜய்யிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

‘‘தமிழ் படங்களில் பிரம்மாண்டம் இருக்கும். அதிக செலவையும் வைக்கும். கதை இரண்டாம் பட்சமாகத்தான் பார்க்கப்படும். மலையாளத்தில் அப்படி இல்லை. அங்கு பெரிய தொகையை முதலீடு செய்வது இல்லை. கதையைத்தான் முக்கியமாக பார்க்கிறார்கள். செலவு இல்லாமல் கதையில் மட்டுமே கவனம் செலுத்தி படம் எடுக்கிறார்கள். 
அவை நன்றாக ஓடுகின்றன.

நல்ல கதைகளுக்கு எல்லா மொழிகளிலுமே வரவேற்பு இருக்கிறது. எனவேதான் ‘பாபநாசம்’ படம் நன்றாக ஓடியது. இதுபோல் தமிழில் வரும் படங்களின் பிரமாண்டத்தை மலையாள பட உலகினர் வியந்து பேசுகிறார்கள். ‘ஷட்டர்’ படம் மலையாளத்தில் வசூல் சாதனை நிகழ்த்திய நல்ல கதையம்சம் உள்ள திகில் படம். 
எனவே தமிழில் ‘ஒரு நாள் இரவில்’ என்ற பெயரில் மொழிமாற்றம் செய்துள்ளோம்.. சத்யராஜ் கதையின் நாயகனாக வருகிறார்.

ஒரு பெண்ணுக்கு கல்வி எவ்வளவு முக்கியம் என்பதை சத்யராஜ் உணர்வதே கதை. தணிக்கை குழுவினர் படத்தை பாராட்டி ‘யூ’ சான்று அளித்துள்ளனர். எம்.எஸ். பிரபு ஒளிப்பதிவு செய்துள்ளார். நவீன் அய்யர் இசையமைத்துள்ளார்.


Post your comment





Related News
தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் - விஜய்யை வாழ்த்திய விஜயகாந்த்
சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்
ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பெயர் அறிவிப்பு
பூஜையுடன் அடுத்த படத்தை துவங்கிய அரவிந்த்சாமி
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
கேரள கன்னியாஸ்திரி விவகாரம் - பத்திரிகையாளரிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் மோகன் லால்
விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்
சீனாவில் 10,000 தியேட்டர்களில் ரிலீஸாகும் விஜய்யின் மெர்சல்
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions