போராட்டத்தை தடுக்க ஜாமர் கருவி மூலம் ‘இன்டர்நெட் கட்’!!

Bookmark and Share

போராட்டத்தை தடுக்க ஜாமர் கருவி மூலம் ‘இன்டர்நெட் கட்’!!

மதுரை அலங்காநல்லூர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை நேற்று போலீசார் கைது செய்ததையடுத்து, அவர்களை விடுவிக்கக்கோரி அங்கு ஏராளமான மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுவருகின்றனர்.

அதனைத்தொடர்ந்து, சென்னை மெரீனாவிலும் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் கூடி போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இந்த போராட்டம் விடிய விடிய 2வது நாளாக தொடர்ந்து வருகிறது.

இந்த போராட்டம் வாட்ஸ்அப், சமூக வலைத்தளங்கள் மூலம் பரவிவருவதால்  மேலும் ஏராளமான இளைஞர்கள் குவியத்தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில், ஜல்லிக்கட்டுக்காக சென்னை மெரீனா கடற்கரையில் இரவிலும் தொடரும் போராட்டத்தை ஒடுக்க மொபைல் சிக்னல்களை தடுக்கும் ஜாமர் கருவி பயன்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தகவல் பறிமாற்றத்தை தடுக்கவே ஜாமர் கருவி பயன்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது.

அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions