காதலர் ஜெய்சங்கரை பிரிந்து விட்டேன்: நடிகை அல்போன்சா கண்ணீர்

Bookmark and Share

காதலர் ஜெய்சங்கரை பிரிந்து விட்டேன்: நடிகை அல்போன்சா கண்ணீர்

கவர்ச்சி நடிகை அல்போன்சாவும் ஜெய்சங்கர் என்ற இளைஞரும் இணைந்து இருப்பது போன்ற வீடியோ காட்சி சமீபத்தில் பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப்பில் வெளியானது. இதைப் பார்த்த மயிலாடுதுறையைச் சேர்ந்த சுமித்ரா என்ற பெண் சென்னை வந்து போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். அதில், ‘‘நடிகை அல்போன்சாவுடன் இருக்கும் ஜெய்சங்கர் எனது கணவர். அவரை நடிகையிடம் இருந்து மீட்டுக் கொடுங்கள்’’ என்று கூறியிருந்தார்.

இதையடுத்து கமிஷனர் அலுவலக பெண் அதிகாரிகள் சுமித்ராவை நேரில் வர வழைத்து முதல் கட்ட விசாரணை நடத்தினார்கள். இது தொடர்பாக நடிகை அல்போன்சாவிடம் விசாரிக்க போலீசார் முடிவு செய்தனர். ஆனால் அவரை தொடர்பு கொள்ள முடிய வில்லை. தலைமறைவாக இருப்பதாகவும் தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

இந்த நிலையில் நடிகை அல்போன்சா கண்ணீர் மல்க பதில் அளித்துள்ளார். சுமித்ராவின் உறவினர் ஒருவருக்கு வாட்ஸ் அப் மூலம் தனது விளக்கத்தை தெரிவித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:–

நான் அல்போன்சா பேசுகிறேன். ஜெய்சங்கருடன் வாழும் பெண் நான்தான். தற்போது ஜெய்சங்கருடன் வாழ விருப்பம் இல்லை. நான் ஏமாந்து இருக்கிறேன். ரொம்ப நம்பி ஏமாந்திருக்கிறேன். எனது வாழ்க்கை நாஸ்தியான வாழ்க்கை. என் பாய்பிரண்ட் என்றால் எனக்கு உயிர். அவர்தான் எல்லாமே என்று இருந்தேன். அந்த காதல் செத்து விட்டது. அன்பைத் தேடி தேடி அலைந்தேன். அப்போதுதான் ஜெய்சங்கரிடம் என் வாழ்க்கையை கொடுத்தேன். அவர் 8 வருடம் காதலித்த பெண் தன்னை ஏமாற்றி விட்டார். அவள் ஒரிஜினல் இல்லை என்று என்னிடம் கூறினார்.

முதலில் என்னைத்தான் ஜெய்சங்கர் திருமணம் செய்தார். இந்த திருமணம் துபாயில் வைத்து நடந்தது. தற்போது நான் ஜெய்சங்கரை விட்டு வெளியே வந்து விட்டேன். சாரி அக்கா நான் ஒரு பெண்ணின் வாழ்க்கையை கெடுத்து விட்டேன். ஜெய்சங்கரை தற்போது விட்டு விட்டேன். அவர் சுமித்ராவை அதிகமாக காதலித்து வருகிறார். சுமித்ராவுடன் அவரை வாழ வையுங்கள்.

இவ்வாறு கதறி அழுதவாறு அல்போன்சா கூறியுள்ளார்.

நடிகை அல்போன்சா 1995–ம் ஆண்டு வெளியான ரஜினியின் பாட்ஷா படத்தில் ‘‘ரா... ரா... ராமையா’’ பாடலுக்கு நடனம் ஆடினார். இதன் மூலம் அவர் நடன நடிகையாக புகழ் பெற்றார். தொடர்ந்து நாடோடி மன்னன், ரட்சகன், பத்ரி, தில், பஞ்ச தந்திரம் உள்பட ஏராளமான தமிழ், தெலுங்கு, கன்னட படங்களில் கவர்ச்சி நடனமாடினார்.

திரை உலகில் முன்னேறிக் கொண்டு இருந்த நடிகர் ஒருவரை காதலித்தார். அவர் திடீரென தற்கொலை செய்ததால் அல்போன்சாவும் கடந்த 2012–ம் ஆண்டு தூக்க மாத்திரைகள் தின்று தற்கொலைக்கு முயன்றார். ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு காப்பாற்றப்பட்டார்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions