விபத்தில் சிக்கிய பிரபல பாலிவுட் நடிகை

Bookmark and Share

விபத்தில் சிக்கிய பிரபல பாலிவுட் நடிகை

பிக் ஸ்டார் என்டெர்டையின்மென்ட் விருது வழங்கும் நிகழ்ச்சியில் வெடித்த பட்டாசுகள் நடிகை அலியாபட்டை பதம்பார்த்து அவருக்கு லேசான காயங்களை ஏற்படுத்தி இருக்கின்றன. கடந்த ஞாயிறன்று பிக் ஸ்டார் என்டெர்டையின்மென்ட் சார்பில் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் அலியா பட்டின் நடனமும் இடம் பெற்றிருந்தது.

இந்த விழாவில் அலியா பட் மேடையேறிய போது அந்த இடத்தை வண்ணமயமாக மாற்றும் வகையில் பட்டாசுகள் வெடிக்க ஆரம்பித்தன. இதில் ஒரு பட்டாசு திடீரென்று பறந்து வந்து அலியாவின் மேல் விழுந்தது. எதிர்பாராத விதமாக நடந்த இந்த சம்பவத்தின் போது அலியா தனது முகத்தை வலது கையால் மூடிக் கொண்டார்.

இதனால் அவரின் முழங்கை மற்றும் கைகளில் காயம் ஏற்பட்டது. தொடர்ந்து அவருக்கு முதலுதவி அளித்த பின்னர் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அவரை அவசரமாக அவரது வீட்டிற்கு காரில் அனுப்பி வைத்தனர்.

இது குறித்து அலியா தனது ட்விட்டர் பக்கத்தில் "வாழ்க்கையில் விபத்து ஏற்படாமல் தடுக்க முடியாது எனினும் இதுபோன்ற விபத்துக்களில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ள முடியும். மொத்தத்தில் என்னுடைய முகம் நன்றாக இருக்கிறது" என்று தெரிவித்து இருக்கிறார்.

தற்போது அலியா பட்டின் தீவிர ரசிகர்கள் அவரது உடல்நிலை குறித்து மிகுந்த அக்கறையுடன் நலம் விசாரித்து வருகின்றனர்.


Post your comment





Related News
நிர்வாண போட்டோ ஷூட் நடத்திய முன்னணி நடிகை - வைரலாகும் புகைப்படம்.!
பிரபாஸுடன் நடிக்க மறுத்த ஆலியா பாட் - காரணம் இது தானாம்.!
வயதான பிறகு நடிகைகளுக்கு சினிமாவில் மரியாதை இல்லை: அலியா பட்
நான் அவ்ளோ சொல்லியும் அவ கூட நடிக்கற - வாரிசு நடிகர் மீது காண்டான காதலி.!
அந்த மாதிரி நடிக்க ஆசைனு சொன்ன நடிகைக்கு என்ன நிலைமை தெரியுமா?
ஆலியா பட்டுக்கு திருமணம்?
என்னை கவர்ந்த ஒரே தென்னிந்திய நடிகர் இவர்தான்: ஆலியா பட்
இரவு 3 மணிக்கு காதலர் வீட்டில் இருந்து கிளம்பியபோது குடிகாரரிடம் சிக்கிய நடிகை
இளைஞர்களின் கனவு கன்னியாக மாறுவதே லட்சியம்: ஆலியா மானசா
இளம் இந்திய நடிகையின் சாதனை!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions