பாலிவுட் நடிகை ஆலியா பட்டின் திடிர் முடிவு- ரசிகர்கள் வருத்தம்

Bookmark and Share

பாலிவுட் நடிகை ஆலியா பட்டின் திடிர் முடிவு- ரசிகர்கள் வருத்தம்

பாலிவுட்டில் ஒரு படத்தின் படப்பிடிப்பு எவ்வளவு சீக்கிரம் முடியும் என்று கூற முடியாது. ஒரு படத்தில் கமிட்டாகிவிட்டால் மற்ற படங்களில் நடிக்க முடியாது. ஏனெனில் ஒரு படத்துக்கே அவ்வளவு வேலைகள் இருக்கும் நடிகர்களுக்கே.

அண்மையில் Badrinath Ki Dulhania என்ற வெற்றி படத்தை கொடுத்த நாயகி ஆலியா பட். அயன் முகர்ஜி இயக்கத்தில் ஆலியா பட் நடிக்க இருக்கும் Dragon படம் செப்டம்பரில் தான் தொடங்க இருக்கிறது. இதனால் தான் சில விஷயங்களை கற்றுக்கொள்ள நேரம் ஒதுக்க இருப்பதாக ஆலியா பட் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

இந்த இடைவேளையில் பியானோ, கதக் போன்றவற்றை கற்றுக்கொள்ள முடிவு செய்திருக்கிறார். அதோடு ஒருபக்கம் சமையலும் கற்றுக்கொள்ள போகிறாராம்.

இதனால் அவரை சிறிது மாதம் கேமரா முன் பார்க்க முடியாதோ என்று வருத்தத்தில் இருக்கின்றனர் ரசிகர்கள்.


Post your comment











About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions