திருமணத்துக்கு தயாரான சைத்தான் பட நாயகி!

Bookmark and Share

திருமணத்துக்கு தயாரான சைத்தான் பட நாயகி!

அதர்வா நடித்த ‘இரும்பு குதிரை’ படத்தில் வில்லன் பைக்கரின் காதலியாக நடித்தவர் பிரபல பைக் ரேஸ் வீராங்கனை அலிஷா அப்துல்லா.

இவர் சென்னையை சேர்ந்தவர். இவர்தான் இந்தியாவிலேயே முதல் பைக் ரேஸ் வீராங்கனை என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தற்போது விஜய் ஆண்டனி நடித்துவரும் ‘சைத்தான்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், அலிஷா அப்துல்லாவுக்கும் நவீன் தேவன்ராஜ் என்பவருக்கும் சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. இந்த நிச்சயதார்த்த விழா மாமல்லபுரம் அருகே உள்ள கடற்கரை உல்லாச விடுதியில் நடைபெற்றது. இதில் இரண்டு பேரின் குடும்பத்தாரும், நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டார்கள்.

நிச்சயதார்த்தம் இனிதாக நடைபெற்று முடிந்துள்ள நிலையில், இவர்களது திருமணம் அடுத்த வருடம் ஜனவரி 18-ந் தேதி பாலி தீவில் நடைபெறவிருக்கிறது. 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions