ஜூலை 17ல் திரைக்கு வரும் அல்லரி நரேஷின் ஜேம்ஸ் பாண்ட்

Bookmark and Share

ஜூலை 17ல் திரைக்கு வரும் அல்லரி நரேஷின் ஜேம்ஸ் பாண்ட்

குறும்பு , போராளி போன்ற தமிழ் படங்களில் நடித்துள்ள தெலுங்கு நடிகர் அல்லரி நரேஷ் டோலிவுட்டில் நகைச்சுவை நாயகனாக பல படங்களில் நடித்து வெற்றி கண்டுள்ளார். அப்படங்களின் வரிசையில் அல்லரி நரேஷ் தற்போது நடித்துள்ள ஜேம்ஸ் பாண்ட் படமும் நகைச்சுவை கலந்த அதிரடி திரைப்படமாக உருவாகியுள்ளதாம்.

ஏ.கே.என்டர்டையின்மென்ட் பட நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் சாய் கிஷோர் இயக்கியுள்ளார். இப்படத்தில் நாயகியாக நடிகை சாக்ஷி சௌத்ரி நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் நடிகர்கள் ஆஷிஷ் வித்யார்த்தி, ஜெய பிரகாஷ் ரெட்டி, ரகு பாபு ஆகியோர் நடித்துள்ளனர்.

ஜூன் 26 ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்ட இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நிறைவடையாததால் திரையிடும் தேதி மாற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. தற்போது இப்படம் ஜூலை 17 ஆம் தேதி திரைக்கு வரும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.


Post your comment





Related News
அல்லரி நரேஷிற்கு மாமனாரான மோகன் பாபு
தெலுங்கானா முதல்வருக்கு திருமண அழைப்பு கொடுத்த அல்லரி நரேஷ்
மே 14 ஆம் திரைக்கு வரும் அல்லரி நரேஷ் பட பாடல்கள்
இணையத்தில் வெளியான அல்லரி நரேஷ் திருமண புகைப்படம்
காமெடி கிங் அல்லேரி நரேஷின் அடுத்த கலக்கல்
ஆண்\' கார்த்திகா...\'பெண்\' நரேஷ்...??
கார்த்திகாவின் காமெடி கலவரம்
ஷகீலா இயக்கிய படம் அடுத்த மாதம் ரிலீஸ்...








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions