மே 14 ஆம் திரைக்கு வரும் அல்லரி நரேஷ் பட பாடல்கள்

Bookmark and Share

மே 14 ஆம் திரைக்கு வரும் அல்லரி நரேஷ் பட பாடல்கள்

குறும்பு படத்தின் வாயிலாக தமிழ் திரை ரசிகர்களுக்கு அறிமுகமான தெலுங்கு நடிகர் அல்லரி நரேஷ் அப்படத்தைத் தொடர்ந்து போராளி படத்தில் நடித்தார்.

அதன் பின்னர் தமிழ் படங்களில் நடிக்காத இவர் தெலுங்கில் பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். தற்போது ஜேம்ஸ் பாண்ட் - நீனு காது நா பெல்லாம் படத்தில் அல்லரி நரேஷ் நாயகனாக நடித்து வருகின்றார்.

இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா மே 14 ஆம் தேதி நடைபெறவுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. அறிமுக இயக்குநர் சாய் கிஷோர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தில் நரேஷிற்கு ஜோடியாக நடிகை சாக்ஷி சௌத்ரி நடித்துள்ளார்.

நகைச்சுவை கலந்த அதிரடி திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தில் நடிகர்கள் ஆஷிஷ் வித்யார்த்தி, ஜெயப் பிரகாஷ் ரெட்டி, ரகு பாபு போன்ற பிரபலங்கள் நடித்துள்ளனர். ஏ.கே.என்டர்டையின்மென்ட் பட நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.


Post your comment





Related News
அல்லரி நரேஷிற்கு மாமனாரான மோகன் பாபு
ஜூலை 17ல் திரைக்கு வரும் அல்லரி நரேஷின் ஜேம்ஸ் பாண்ட்
தெலுங்கானா முதல்வருக்கு திருமண அழைப்பு கொடுத்த அல்லரி நரேஷ்
இணையத்தில் வெளியான அல்லரி நரேஷ் திருமண புகைப்படம்
காமெடி கிங் அல்லேரி நரேஷின் அடுத்த கலக்கல்
ஆண்\' கார்த்திகா...\'பெண்\' நரேஷ்...??
கார்த்திகாவின் காமெடி கலவரம்
ஷகீலா இயக்கிய படம் அடுத்த மாதம் ரிலீஸ்...








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions