மழை பாதிப்பிற்கு ரூ.25 லட்சம் அளித்த அல்லு அர்ஜூன்!

Bookmark and Share

மழை பாதிப்பிற்கு ரூ.25 லட்சம் அளித்த அல்லு அர்ஜூன்!

சென்னையை உலுக்கி எடுத்த கனமழையால் தலைநகரம் சென்னை தற்போது வெள்ளத்தில் தத்தளித்து கொண்டு இருக்கிறது. எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாய் காட்சியளிக்கிறது. சென்னை மட்டுமின்றி அதன் சுற்றியுள்ள பகுதிகளிலும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

இந்நிலையில் தமிழகத்திற்கு மத்திய அரசு முதல் அண்டை மாநிலங்கள் வரை பலரும் நிதியுதவி அளித்து வருகின்றனர்.

அதுமட்டுமல்லாது நடிகர்கள் ரஜினிகாந்த், சூர்யா, கார்த்தி, விஷால், விக்ரம் பிரபு, சிவகார்த்திகேயன், தனுஷ், சிபிராஜ், உள்ளிட்ட பல தமிழ் திரையுலக பிரபலங்களும் நிதியுதவி அளித்துள்ளனர். 

இந்நிலையில், தெலுங்கு நடிகர்களான அல்லு அர்ஜூன்(ரூ.25 லட்சம்), ஜூனியர் என்டிஆர்.,(ரூ.10 லட்சம்) மகேஷ் பாபு (ரூ.10 லட்சம்) உள்ளிட்டோரும் முதல்வரின் வெள்ள நிவாரணத்துக்கு நிதி வழங்கியுள்ளார்கள்.

மேலும் அல்லு அர்ஜூன் டுவிட்டரில் “ நான் சென்னைக்கு இப்பணத்தை அளிப்பதற்கு சந்தோஷப்படுகிறேன். நான் 18 வருடங்கள் சென்னையில் வாழ்ந்துள்ளேன். நான் இந்த நிலையில் இருப்பதற்கு சென்னை தான் காரணம். நான் சென்னையை காதலிக்கிறேன்” என்று டுவிட் செய்துள்ளார்.

இவர்கள் தவிர வருண்தேஜ் ரூ. 3 லட்சமும், சம்பூர்னேஷ் பாபு என்பவர் ரூ. 50 ஆயிரம் நிதி, சாய் தருண் தேஜ் ரூ.3 லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்களை அளித்துள்ளார்கள்.

 


Post your comment





Related News
அர்ஜுன், ஜெகபதி பாபு, ஜாக்கி ஷெராப் நடிக்கும் படத்தின் ஹீரோ யார்?
இந்த விஜய்க்கு ஒரே நாளில் நடந்த எதிர்பாராத அதிர்ச்சி! ரசிகர், ரசிகைகள் சோகம்
விஜய் ஆண்டனி - அர்ஜுன் கூட்டணியில் விருவிருவென வளர்ந்து வரும் "கொலைகாரன்"
தமிழாற்றுப்படை : செயங்கொண்டார் குறித்து கவிஞர் வைரமுத்து கட்டுரை அரங்கேற்றுகிறார்
நயன்தாரா படம் பற்றிய வதந்தி! இயக்குனர் விளக்கம்
நயன்தாராவிற்கு இவர் ஜோடியா? ஷாக் ஆன ரசிகர்கள்
"பயப்படாம கட்டிப்புடி " ; 'X வீடியோஸ் நடிகருக்கு ஊக்கம் கொடுத்த லட்சுமிராய்..
கொலைகாரனுடன் இணைந்த அர்ஜுன்
அல்லு அர்ஜுன் தமிழில் நடிக்கும் "என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா" .
விஜயின் புது பட டைட்டில், பிரீ ப்ரோமோஷன் செய்யுமா பா.ஜ.க.? - புகைப்படம் உள்ளே.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions