தனது பிறந்தநாளன்று டுவிட்டரில் இணையும் அல்லு அர்ஜுன்

Bookmark and Share

தனது பிறந்தநாளன்று டுவிட்டரில் இணையும் அல்லு அர்ஜுன்

தெலுங்கு திரையில் மட்டுமல்லாது மலையாளத் திரையிலும் அதிகமாக ரசிகர்களைக் கொண்ட நடிகர் அல்லு அர்ஜுன் ரசிகர்களுக்கு தனது பிறந்தநாள் அன்று இன்ப அதிர்ச்சி தரப்போகின்றார்.

எதிர் வரும் 8 ஆம் தேதி தனது பிறந்தநாளை விமர்சையாகக் கொண்டாட திட்டமிட்டுள்ள அல்லு அர்ஜூன் அன்றைய தினம் சமூக வலைதளமான டுவிட்டரில் இணையப் போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

இதனை அறிந்த ரசிகர்கள் உற்சாகத்தில் ஆழ்ந்துள்ளனர். இதன் மூலம் தனது படம் குறித்த தகவல்களை ரசிகர்களுக்கு நேரடியாக தெரிவிக்கவும் அல்லு அர்ஜூன் திட்டமிட்டுள்ளார்.

தற்போது அல்லு அர்ஜுன் இயக்குநர் திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் S/o சத்தியமூர்த்தி படத்தில் நடிகை சமந்தா மற்றும் நடிகை நித்யா மேனன் ஆகியோருடன் நடித்து வருகின்றார். இப்படம் அவரது பிறந்த நாளுக்கு மறு தினம் அதாவது ஏப்ரல் 9 ஆம் தேதி திரைக்கு வருகின்றது.

 


Post your comment





Related News
அர்ஜுன் மீதான புகாரால் ஸ்ருதியின் ரகசியம் வெளியானது
பாலியல் புகார் கூறிய நடிகைக்கு எதிராக ரூ.5 கோடி கேட்டு அர்ஜூன் வழக்கு
நடிகர் அர்ஜூனுக்கு தெலுங்கு நடிகை சோனி செரிஸ்டா ஆதரவு!
விளம்பரத்துக்காக பொய் சொல்கிறார் - நடிகை சுருதிஹரிகரனுக்கு அர்ஜுன் மகள் கண்டனம்
அர்ஜுன், ஜெகபதி பாபு, ஜாக்கி ஷெராப் நடிக்கும் படத்தின் ஹீரோ யார்?
இந்த விஜய்க்கு ஒரே நாளில் நடந்த எதிர்பாராத அதிர்ச்சி! ரசிகர், ரசிகைகள் சோகம்
விஜய் ஆண்டனி - அர்ஜுன் கூட்டணியில் விருவிருவென வளர்ந்து வரும் "கொலைகாரன்"
தமிழாற்றுப்படை : செயங்கொண்டார் குறித்து கவிஞர் வைரமுத்து கட்டுரை அரங்கேற்றுகிறார்
நயன்தாரா படம் பற்றிய வதந்தி! இயக்குனர் விளக்கம்
நயன்தாராவிற்கு இவர் ஜோடியா? ஷாக் ஆன ரசிகர்கள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions