அல்லு அர்ஜுனின் புதிய படம்

Bookmark and Share

அல்லு அர்ஜுனின் புதிய படம்

டோலிவுட்டின் வெற்றி நாயகன் அல்லு அர்ஜுனுக்கு தெலுங்கு திரையில் மட்டுமல்லாது தமிழ் மற்றும் மலையாள திரைரசிகர்களும் ஏராளமாக உண்டு. அல்லு அர்ஜுனின் நடிப்பில் வெளிவந்த S/O சத்யமூர்த்தி திரைப்படம் விமர்சனரீதியாக சறுக்கினாலும் வசூலில் சக்கை போடு போட்டது.

அப்படத்திற்கு பின்னர் அல்லு அர்ஜுன் இயக்குநர் பூபதி ஸ்ரீனு இயக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

இயக்குநர் பூபதி ஸ்ரீனு, நடிகர் பாலகிருஷ்ணா கூட்டணியில் வெளிவந்த லெஜண்ட் படத்தை தொடர்ந்து பூபதி அல்லு அர்ஜுனின் படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தை தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் கீதா ஆர்ட்ஸ் பேனர் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கவுள்ளார்.

இசையமைப்பாளர் தமன் ரேஸ் குர்ரம் படத்திற்கு பின்னர் மீண்டும் அல்லு அர்ஜுன் படத்திற்கு இசையமைக்கவுள்ளார். இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடிக்கும் நாயகி உட்பட பிற நடிகர் நடிகைகள் தேர்வு தற்போது நடைபெற்று வருகின்றது.


Post your comment





Related News
அர்ஜுன், ஜெகபதி பாபு, ஜாக்கி ஷெராப் நடிக்கும் படத்தின் ஹீரோ யார்?
இந்த விஜய்க்கு ஒரே நாளில் நடந்த எதிர்பாராத அதிர்ச்சி! ரசிகர், ரசிகைகள் சோகம்
விஜய் ஆண்டனி - அர்ஜுன் கூட்டணியில் விருவிருவென வளர்ந்து வரும் "கொலைகாரன்"
தமிழாற்றுப்படை : செயங்கொண்டார் குறித்து கவிஞர் வைரமுத்து கட்டுரை அரங்கேற்றுகிறார்
நயன்தாரா படம் பற்றிய வதந்தி! இயக்குனர் விளக்கம்
நயன்தாராவிற்கு இவர் ஜோடியா? ஷாக் ஆன ரசிகர்கள்
"பயப்படாம கட்டிப்புடி " ; 'X வீடியோஸ் நடிகருக்கு ஊக்கம் கொடுத்த லட்சுமிராய்..
கொலைகாரனுடன் இணைந்த அர்ஜுன்
அல்லு அர்ஜுன் தமிழில் நடிக்கும் "என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா" .
விஜயின் புது பட டைட்டில், பிரீ ப்ரோமோஷன் செய்யுமா பா.ஜ.க.? - புகைப்படம் உள்ளே.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions