மலையாள இயக்குநர்களிடம் கதை கேட்கும் அல்லு அர்ஜுன்

Bookmark and Share

மலையாள இயக்குநர்களிடம் கதை கேட்கும் அல்லு அர்ஜுன்

டோலிவுட் ஸ்டைல் நாயகன் அல்லு அர்ஜுனுக்கு தெலுங்கு திரை உலகம் போல் தமிழ் மற்றும் மலையாள திரை உலகிலும் தீவிர ரசிகர்கள் உள்ளனர். அல்லு அர்ஜுன் நடிக்கும் தெலுங்கு படங்கள் மலையாளத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெற்றி பெறுகின்றன.

இதனால் நேரடி மலையாளப் படத்தில் நடிக்க அல்லு அர்ஜுனுக்கு ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதனை பரிசீலனை செய்து வரும் அல்லு அர்ஜுன் மலையாள இயக்குநர்கள் பலரிடம் கதை கேட்டுள்ளார்.

அதில் ஒருவர் கூறிய கதை பிடித்துப் போகவே அப்படத்தில் நடிக்க அல்லு அர்ஜுன் சம்மதம் தெரிவித்துள்ளாராம். இப்படம் மலையாளம், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் என கூறப்படுகின்றது.

அல்லு அர்ஜுன் S/O சத்யமூர்த்தி படத்தின் வெற்றிக்கு பின்னர் இயக்குநர் பூபதி ஸ்ரீனு இயக்கும் படத்தில் நடிக்கின்றார். இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராகுல் ப்ரீத்தி சிங் நடிக்கவுள்ளார்.

இப்படத்தை தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் கீதா ஆர்ட்ஸ் பேனர் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கின்றார். இசையமைப்பாளர் தமன் இப்படத்திற்கு இசையமைக்கின்றார்.இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது.


Post your comment





Related News
அர்ஜுன், ஜெகபதி பாபு, ஜாக்கி ஷெராப் நடிக்கும் படத்தின் ஹீரோ யார்?
இந்த விஜய்க்கு ஒரே நாளில் நடந்த எதிர்பாராத அதிர்ச்சி! ரசிகர், ரசிகைகள் சோகம்
விஜய் ஆண்டனி - அர்ஜுன் கூட்டணியில் விருவிருவென வளர்ந்து வரும் "கொலைகாரன்"
தமிழாற்றுப்படை : செயங்கொண்டார் குறித்து கவிஞர் வைரமுத்து கட்டுரை அரங்கேற்றுகிறார்
நயன்தாரா படம் பற்றிய வதந்தி! இயக்குனர் விளக்கம்
நயன்தாராவிற்கு இவர் ஜோடியா? ஷாக் ஆன ரசிகர்கள்
"பயப்படாம கட்டிப்புடி " ; 'X வீடியோஸ் நடிகருக்கு ஊக்கம் கொடுத்த லட்சுமிராய்..
கொலைகாரனுடன் இணைந்த அர்ஜுன்
அல்லு அர்ஜுன் தமிழில் நடிக்கும் "என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா" .
விஜயின் புது பட டைட்டில், பிரீ ப்ரோமோஷன் செய்யுமா பா.ஜ.க.? - புகைப்படம் உள்ளே.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions