விளையாட்டு வீரராக நடிக்க விரும்பும் அல்லு அர்ஜுன்

Bookmark and Share

விளையாட்டு வீரராக நடிக்க விரும்பும் அல்லு அர்ஜுன்

பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் காதல் மற்றும் அதிரடி படங்களில் நடித்து வெற்றி கண்டவர். இவரது நடிப்பில் அண்மையில் வெளிவந்த S/O சத்யமூர்த்தி படம் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்று வெற்றி படமாக அமைந்தது.

இப்படத்தைத் தொடர்ந்து  இயக்குநர் பூபதி ஸ்ரீனு  இயக்கும் படத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கவுள்ளார். இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராகுல் ப்ரீத்தி சிங் நடிக்கவுள்ளார்.  

தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் கீதா ஆர்ட்ஸ் பேனர் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் ஜூலை 26 முதல் துவங்கவுள்ளன. இந்நிலையில் கபடி போட்டியில் பங்கேற்கும் தெலுங்கு டைடன் குழுவின் தூதராக அல்லு அர்ஜுன் நியமிக்கப்பட்டுள்ளார்.  

இதற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய அல்லு அர்ஜுன் தெலுங்கு டைடன் குழுவின் தூதராக நியமிக்கப்பட்டது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார். மேலும் விளையாட்டை மையப்படுத்திய படத்தில் நடிக்க தான் ஆர்வமாக உள்ளதாகவும் படங்களில் நடிப்பதற்கு பின்னர் விளையாட்டை தான் அதிகமாக நேசிப்பதாகவும் அல்லு அர்ஜுன் கூறினார். 


Post your comment





Related News
அர்ஜூன் கதாபாத்திரத்துக்கு விஜய் தான் சரியாக இருப்பார் - பிரபல எழுத்தாளர் விருப்பம்
96 ரீமேக்கில் அல்லு அர்ஜுன்
அர்ஜுன் மீதான புகாரால் ஸ்ருதியின் ரகசியம் வெளியானது
பாலியல் புகார் கூறிய நடிகைக்கு எதிராக ரூ.5 கோடி கேட்டு அர்ஜூன் வழக்கு
நடிகர் அர்ஜூனுக்கு தெலுங்கு நடிகை சோனி செரிஸ்டா ஆதரவு!
விளம்பரத்துக்காக பொய் சொல்கிறார் - நடிகை சுருதிஹரிகரனுக்கு அர்ஜுன் மகள் கண்டனம்
அர்ஜுன், ஜெகபதி பாபு, ஜாக்கி ஷெராப் நடிக்கும் படத்தின் ஹீரோ யார்?
இந்த விஜய்க்கு ஒரே நாளில் நடந்த எதிர்பாராத அதிர்ச்சி! ரசிகர், ரசிகைகள் சோகம்
விஜய் ஆண்டனி - அர்ஜுன் கூட்டணியில் விருவிருவென வளர்ந்து வரும் "கொலைகாரன்"
தமிழாற்றுப்படை : செயங்கொண்டார் குறித்து கவிஞர் வைரமுத்து கட்டுரை அரங்கேற்றுகிறார்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions