ஜூலை 19ல் துவங்கும் அல்லு அர்ஜுனின் படம்

Bookmark and Share

ஜூலை 19ல் துவங்கும் அல்லு அர்ஜுனின் படம்

ஸ்டைல் நாயகன் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்து வசூலை வாரிக் குவித்த S/O சத்யமூர்த்தி படத்தை தொடர்ந்து அல்லு அர்ஜுன் இயக்குநர் பூபதி ஸ்ரீனு இயக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இப்படத்தை தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் கீதா ஆர்ட்ஸ் பேனர் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கவுள்ளார். இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராகுல் ப்ரீத்தி சிங் நடிக்கவுள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்புகள் ஜூலை 19 ஆம் தேதி பூஜையுடன் துவங்கும் என அறிவிப்பு வெளிவந்துள்ளது. ராகுல் ப்ரீத்தி சிங், ஜூனியர் என்.டி.ஆருடன் ஜோடியாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பில் ஜூலை 6 ஆம் தேதியிலிருந்து கலந்து கொள்ளவுள்ளார்.

அப்படத்தின் படப்பிடிப்புகளை முடித்து விட்டு ராகுல் ப்ரீத்தி சிங், அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது. இசையமைப்பாளர் தமன் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார்.

அல்லு அர்ஜுன் மற்றும் அனுஷ்கா நடிப்பில் உருவாகியுள்ள ருத்ரமாதேவி எனும் வரலாற்று திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.


Post your comment





Related News
அர்ஜுன் மீதான புகாரால் ஸ்ருதியின் ரகசியம் வெளியானது
பாலியல் புகார் கூறிய நடிகைக்கு எதிராக ரூ.5 கோடி கேட்டு அர்ஜூன் வழக்கு
நடிகர் அர்ஜூனுக்கு தெலுங்கு நடிகை சோனி செரிஸ்டா ஆதரவு!
விளம்பரத்துக்காக பொய் சொல்கிறார் - நடிகை சுருதிஹரிகரனுக்கு அர்ஜுன் மகள் கண்டனம்
அர்ஜுன், ஜெகபதி பாபு, ஜாக்கி ஷெராப் நடிக்கும் படத்தின் ஹீரோ யார்?
இந்த விஜய்க்கு ஒரே நாளில் நடந்த எதிர்பாராத அதிர்ச்சி! ரசிகர், ரசிகைகள் சோகம்
விஜய் ஆண்டனி - அர்ஜுன் கூட்டணியில் விருவிருவென வளர்ந்து வரும் "கொலைகாரன்"
தமிழாற்றுப்படை : செயங்கொண்டார் குறித்து கவிஞர் வைரமுத்து கட்டுரை அரங்கேற்றுகிறார்
நயன்தாரா படம் பற்றிய வதந்தி! இயக்குனர் விளக்கம்
நயன்தாராவிற்கு இவர் ஜோடியா? ஷாக் ஆன ரசிகர்கள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions