அல்லு அர்ஜுனுக்கு ஏன் இவ்வளவு கோபம்?

Bookmark and Share

அல்லு அர்ஜுனுக்கு ஏன் இவ்வளவு கோபம்?

டோலிவுட்டின் ஸ்டைல் மன்னனாக துறுதுறு நாயகன் வேடங்களை ஏற்று நடித்து வந்த அல்லு அர்ஜுன், அதிக கோபம் கொண்டு சீறும் இளைஞனாக தனது அடுத்த படத்தில் நடிக்கவுள்ளார்.

இயக்குநர் பொய்யப்படி ஸ்ரீனு இயக்கும் படத்தில், அல்லு அர்ஜுன் இக்கதாபாத்திரத்தை ஏற்றுள்ளதாக கூறப்படுகின்றது. ரசிகர்கள் அறிந்திராத வகையில் கோபமாக தோன்றும் அல்லு அர்ஜுன் கண்டிப்பாக ரசிகர்களைக் கவருவார் என இயக்குநர் தெரிவித்துள்ளார்.

இத்தகவல் வெளிவந்தது முதல் ரசிகர்கள் அல்லு அர்ஜுன் ஏன் இவ்வளவு கோபம் கொள்கின்றார் அதற்காக படத்தில் வைக்கப்படும் காட்சிகள் எப்படி இருக்கும் என இப்பொழுதே தங்கள் யூகங்களை தெரிவிக்க துவங்கிவிட்டனர்.

இப்படத்தை தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் கீதா ஆர்ட்ஸ் பேனர் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கின்றார். இப்படத்தில் நடிகைகள் ராகுல் ப்ரீத்தி சிங் மற்றும் கேத்ரின் தெரஸா ஆகியோர் நாயகிகளாக ஒப்பந்தமாகியுள்ளனர்.

மேலும் தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கின்றார். ஜூலை 19 ஆம் தேதி துவங்கிய இப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

 


Post your comment





Related News
அர்ஜுன், ஜெகபதி பாபு, ஜாக்கி ஷெராப் நடிக்கும் படத்தின் ஹீரோ யார்?
இந்த விஜய்க்கு ஒரே நாளில் நடந்த எதிர்பாராத அதிர்ச்சி! ரசிகர், ரசிகைகள் சோகம்
விஜய் ஆண்டனி - அர்ஜுன் கூட்டணியில் விருவிருவென வளர்ந்து வரும் "கொலைகாரன்"
தமிழாற்றுப்படை : செயங்கொண்டார் குறித்து கவிஞர் வைரமுத்து கட்டுரை அரங்கேற்றுகிறார்
நயன்தாரா படம் பற்றிய வதந்தி! இயக்குனர் விளக்கம்
நயன்தாராவிற்கு இவர் ஜோடியா? ஷாக் ஆன ரசிகர்கள்
"பயப்படாம கட்டிப்புடி " ; 'X வீடியோஸ் நடிகருக்கு ஊக்கம் கொடுத்த லட்சுமிராய்..
கொலைகாரனுடன் இணைந்த அர்ஜுன்
அல்லு அர்ஜுன் தமிழில் நடிக்கும் "என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா" .
விஜயின் புது பட டைட்டில், பிரீ ப்ரோமோஷன் செய்யுமா பா.ஜ.க.? - புகைப்படம் உள்ளே.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions