விரைவில், 'ருத்ரமாதேவி' ரிலீஸ் தேதி அறிவிப்பு

Bookmark and Share

விரைவில், 'ருத்ரமாதேவி' ரிலீஸ் தேதி அறிவிப்பு

ராஜமௌலியின் 'பாகுபலி' யா, குணசேகரின் 'ருத்ரமாதேவி' யா என இன்னும் சில வாரங்களில் பட்டிமன்றமே நடத்தும் அளவிற்கு எது சிறந்த படம் என்று கேள்வி எழத்தான் போகிறது. சில நாட்களுக்கு முன் வெளியான 'பாகுபலி' படத்தின் டிரைலர் அந்தப் படத்தைப் பற்றிய பல்வேறு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியான டிரைலர் இரண்டு நாட்களுக்குள்ளாகவே யு டியூப், ஃபேஸ் புக் ஆகியவற்றில் 50 லட்சம் ஹிட்ஸ்களைக் கடந்து இந்தியத் திரையுலகில் ஒரு புதிய சாதனையை படைத்துள்ளது. தமிழ், தெலுங்கில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படம் மற்ற இந்திய மொழிகளிலும், உலக மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிடப்பட உள்ளது.

அதே நேரத்தில் தெலுங்கில் பல வெற்றிப் படங்களை இயக்கிய குணசேகர் 'ருத்ரமாதேவி' என்ற சரித்திரப் படத்தை 3டி முறையில் மிகப் பிரம்மாண்டமாக இயக்கியுள்ளார். உண்மைக் கதையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஒரு படமாக அமைந்துள்ளது. அனுஷ்கா மட்டுமே இந்தப் படத்தில் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அல்லு அர்ஜுன் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் கோடை விடுமுறையில் வெளியாகும் என்று சொல்லப்பட்டது. ஆனால், படத்தின் இறுதிக்கட்டப் பணிகளில் கொஞ்சம் தாமதம் ஏற்பட்டதால் அது தள்ளிப் போனது. தற்போது படத்தின் எடிட்டிங் வேலைகள் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறதாம். அது முடிந்ததும் படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவிக்க உள்ளார்களாம்.

இன்னும் சில நாட்களில் அந்த அறிவிப்பு வெளியாக உள்ளது, அநேகமாக 'பாகுபலி' படத்திற்கு முன்பாகவே 'ருத்ரமாதேவி' வெளியாகலாம் என்றே சொல்கிறார்கள்.


Post your comment





Related News
சரோஜா தேவி வேடத்தில் நடிக்கும் பிரபல நடிகை
சன்னி லியோனுக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு - போராட்டம்
மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா
சுவிட்சர்லாந்தில் நடிகை ஸ்ரீதேவிக்கு சிலை
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..!
“காவியனுக்கு போட்டியாக “சர்கார்“
தேவி ஸ்ரீபிரசாத் - ஹரி - விக்ரம் கூட்டணியில் ஹிட்டான ‘சாமிஸ்கொயர் ’ ஆல்பம்
நிறைவேறிய ஸ்ரீதேவியின் கனவு! குடும்பத்தில் மேலும் ஒரு ஆச்சர்யம்
'தமிழ் திரையுலகின் பொக்கிஷம் சீயான் விக்ரம்’ நடிகர் பிரபு புகழாரம்..!
கமல்ஹாசன் ரோலில் நான் நடிக்க வேண்டும்! ஸ்ரீதேவி மகள் ஜான்வியின் ஆசை நிறைவேறுமா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions