லிங்குசாமி இயக்கத்தில் நடிக்கிறார் அல்லு அர்ஜுன்..?!

Bookmark and Share

லிங்குசாமி இயக்கத்தில் நடிக்கிறார் அல்லு அர்ஜுன்..?!

தெலுங்கு ஹீரோக்களில் 'ஸ்டைலிஷ் ஸ்டார்' அல்லு அர்ஜுன் படங்கள் மட்டுமே கேரளாவில் டப்பிங் செய்யப்பட்டு அங்கேயும் வசூலை அள்ளுகின்றன. கன்னடத்திலும் இதே நிலைதான்.

ஆனால் இதுநாள் வரை தமிழ் சினிமா பக்கம் தலையை திருப்பாமலேயே இருந்துவிட்டார் அல்லு அர்ஜுன். சில வருடங்களுக்கு முன்பு கூட செல்வராகவன் இயக்கத்தில், அல்லு அர்ஜுன் தமிழில் நடிக்கப்போகிறார் என ஒரு பேச்சு அடிபட்டது.

அதோடு சரி.. தற்போது அந்தக்குறையை நிவர்த்தி செய்யும் விதமாக அல்லு அர்ஜுன் விரைவில் நேரடி தமிழ்ப் படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார் என மீண்டும் ஒரு தகவல் கிளம்பியுள்ளது.

இந்தப்படத்தை லிங்குசாமி இயக்க உள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.. ஆனால் இதுகுறித்து ரசிகர்கள் இருவிதமான கருத்துக்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.

லிங்குசாமி பெரிய நடிகர்களான அஜித், விக்ரம், சூர்யா ஆகியோரை வைத்து படம் இயக்கும்போது தோல்வியையே கண்டுள்ளார் என்கின்றனர் ஒருதரப்பினர். ஆனால் மாதவன், விஷால், ஆர்யா, கார்த்தி என அடுத்தகட்ட நடிகர்களை வைத்து படம் இயக்கும்போது கதைக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் படத்தை ஹிட் பண்ணிவிடுகிறார் என்றும் சிலர் வாதங்களை மாற்றி மாற்றி வைக்கிறார்கள்.

அப்படியானால் அல்லு அர்ஜுன் பெரிய நடிகர் இல்லை என்றா சொல்கிறீர்கள் என்றும் ஒருதரப்பு சூடு கிளப்பி வருகிறது. லிங்குசாமிக்கோ இங்கே விஷாலின் 'சண்டக்கோழி-2', கார்த்தியின் 'எண்ணி ஏழே நாள்' என  படங்கள் வரிசைகட்டி நிற்கும்போது இது எப்படி சாத்தியமாகும் என்பதும் தெரியவில்லை.


Post your comment





Related News
தமிழாற்றுப்படை : செயங்கொண்டார் குறித்து கவிஞர் வைரமுத்து கட்டுரை அரங்கேற்றுகிறார்
அல்லு அர்ஜுன் தமிழில் நடிக்கும் "என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா" .
இளையதளபதி விஜய் பற்றி தெலுங்கு நடிகர்கள் கூறியது- ரீவைண்ட்
அல்லு அர்ஜுனுடன் இணைந்து நடிக்கும் முன்னணி தமிழ் நடிகர்கள்
வேதாளத்தின் மோசமான சாதனையை முறியடித்த மற்றொரு படம்?
அஜித் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட முன்னணி நடிகரின் ரசிகர்கள்
விஷால், லிங்குசாமி படம் டிராப் ஆனதா- உண்மை தகவலை வெளியிட்ட இயக்குனர்
போராட்டத்தை தடுக்க ஜாமர் கருவி மூலம் ‘இன்டர்நெட் கட்’!!
அல்லு அர்ஜூன் தன் குழந்தைக்கு வித்தியாசமாக பெயர் வைத்ததன் பின்னணி!
அல்லு அர்ஜூனுக்கு இரண்டாவது பெண் குழந்தை பிறந்தது – டிவிட்டரில் குவியும் வாழ்த்து!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions