பிறந்து வளர்ந்த இடத்தில் சாதிப்பதுதான் கெத்து: அல்லு அர்ஜுன்

Bookmark and Share

பிறந்து வளர்ந்த இடத்தில் சாதிப்பதுதான் கெத்து: அல்லு அர்ஜுன்

லிங்குசாமி இயக்கத்தில் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் தமிழுக்கு அறிமுகமாகிறார். இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் மூலம் கே.ஈ.ஞானவேல்ராஜா பிரம்மாண்டமாக தயாரிக்கிறார். இப்படம் தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகவிருக்கிறது. 

இப்படத்தின் தொடக்கவிழா இன்று சென்னை நட்சத்திர ஓட்டலில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் நடிகர் அல்லு அர்ஜுன், இயக்குனர் லிங்குசாமி, தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல்ராஜா ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த விழாவில் நடிகர் அல்லு அர்ஜுன் தமிழில் பேசி அனைவரையும் வியக்க வைத்தார். 

அவர் பேசும்போது, நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே சென்னைதான். கிட்டத்தட்ட 20 வருடங்கள் சென்னையில் வாழ்ந்திருக்கிறேன். இப்போது 15 வருஷமாகத்தான் ஐதராபாத்தில் தங்கியிருக்கிறேன். நான் தெலுங்கில் பெரிய வெற்றி பெற்றாலும், நான் பிறந்து, வளர்ந்த இந்த சென்னையில் சாதிக்கவேண்டும். அதுதான் கெத்து. அதற்காகத்தான் நான் 10 வருஷமாக காத்திருந்தேன்.

இப்போது லிங்குசாமி சொன்ன கதை பிடித்துப்போனதும் உடனே ஒப்புக்கொண்டேன். இப்படம் தெலுங்கு, தமிழ் ரசிகர்கள் இரண்டு பேரையும் கவரும். இப்படிப்பட்ட ஒரு கதைக்காகத்தான் நான் காத்திருந்தேன். இந்த கதையை கொடுத்த லிங்குசாமிக்கு எனது வாழ்த்துக்கள் என்றார். 

தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல்ராஜா பேசும்போது, இப்படம் எங்களது நிறுவனம் தயாரிக்கும் 12-வது படமாகும். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தொடங்கி 10 வருடங்கள் ஆகிறது. இதுவரை பல வெற்றிப்படங்களை தயாரித்துள்ளோம். இந்த படமும் பெரிய வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றார்.


Post your comment





Related News
96 ரீமேக்கில் அல்லு அர்ஜுன்
தமிழாற்றுப்படை : செயங்கொண்டார் குறித்து கவிஞர் வைரமுத்து கட்டுரை அரங்கேற்றுகிறார்
அல்லு அர்ஜுன் தமிழில் நடிக்கும் "என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா" .
இளையதளபதி விஜய் பற்றி தெலுங்கு நடிகர்கள் கூறியது- ரீவைண்ட்
அல்லு அர்ஜுனுடன் இணைந்து நடிக்கும் முன்னணி தமிழ் நடிகர்கள்
வேதாளத்தின் மோசமான சாதனையை முறியடித்த மற்றொரு படம்?
அஜித் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட முன்னணி நடிகரின் ரசிகர்கள்
விஷால், லிங்குசாமி படம் டிராப் ஆனதா- உண்மை தகவலை வெளியிட்ட இயக்குனர்
போராட்டத்தை தடுக்க ஜாமர் கருவி மூலம் ‘இன்டர்நெட் கட்’!!
அல்லு அர்ஜூன் தன் குழந்தைக்கு வித்தியாசமாக பெயர் வைத்ததன் பின்னணி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions