மீண்டும் அல்லு அர்ஜுனுடன் ஜோடி சேரும் பிரபல நடிகை

Bookmark and Share

மீண்டும் அல்லு அர்ஜுனுடன் ஜோடி சேரும் பிரபல நடிகை

புதிய படத்திற்காக ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜுனும், அழகு நடிகையான ஹன்சிகாவும் மீண்டும் ஜோடி சேர இருக்கிறார்கள்.கடந்த 2007ம் ஆண்டு இருவரும் ஜோடி சேர்ந்த தேஷமுதுரு படம் மெகா ஹிட்டானது நினைவிருக்கலாம். அந்த வெற்றிக் கூட்டணி மீண்டும் எப்போது இணையும் என்று அனைவரும் எதிர்பார்த்து இருந்தனர்.

இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப்பிறகு அந்த அழகான ஜோடி மீண்டும் ஒன்று சேர்கிறது.பிரபல இயக்குனர் போயபடி ஸ்ரீனு இயக்கத்தில் உருவாக இருக்கும் புது படத்தில் தான் அல்லு அர்ஜுனும், ஹன்சிகாவும் ஜோடி சேர்கின்றனர்.

இந்த படத்தில் அல்லுவுக்கு இன்னொரு நாயகியும் உண்டு. அந்த சான்ஸ் யாருக்கு என்பதை பின்னர் அறிவிக்க இருக்கிறார்களாம். இந்த மாத இறுதியில் இந்த புதிய படத்திற்கான தொடக்க விழா நடக்க இருக்கிறதாம். இந்த படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான கீதா ஆர்ட்ஸ் தயாரிக்கின்றது.

பிரபல இசை அமைப்பாளரான தமன் இசை அமைக்கிறாராம். மற்ற நடிகர்/ நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளிவரும்


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions