கணவரை அபகரித்ததாக பெண் புகார்: நடிகை அல்போன்சாவுக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு?

Bookmark and Share

கணவரை அபகரித்ததாக பெண் புகார்: நடிகை அல்போன்சாவுக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு?

தமிழ் பட உலகில் அல்போன்சா கவர்ச்சி நடிகையாக வலம் வருகிறார். ஒரு பாடலுக்கு குத்தாட்டமும் ஆடி வருகிறார்.

ஏற்கனவே இவர் வீட்டில் வாலிபர் ஒருவர் தூக்கில் தொங்கி இறந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது ஒரு பெண்ணின் கணவரை அபகரித்ததாக மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

மயிலாடுதுறையைச் சேர்ந்த அந்த பெண்ணின் பெயர் சுமத்ரா. இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அல்போன்சா மீது கடந்த மாதம் புகார் அளித்தார்.

அதில் ஜெய்சங்கர் என்பவருடன் 2013–ல் தனக்கு திருமணம் நடந்தது என்றும் திருமணத்துக்கு பிறகு என் கணவர் பல நாட்கள் வீட்டுக்கு வராமலேயே இருந்தார் என்றும் சமீபத்தில் சமூக வளைத்தளத்தில் இவர்தான் என் மனைவி என்று கூறி அல்போன்சா படங்களை என் கணவர் வெளியிட்டு இருந்தார் என்றும் கூறி இருந்தார்.

என் கணவரை அல்போன்சாவிடம் இருந்து மீட்டுத்தர வேண்டும் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

இதுகுறித்து போலீசார் விசாரித்து வந்தனர். இந்த புகாரில் தான் கைதாகலாம் என கருதி அல்போன்சா முன் ஜாமீன் கேட்டு ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி எம்.எம். சுந்தரேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த மனு மீதான விசாரணை அடுத்த மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டது.

அல்போன்சா தொடர்ந்து தலைமறைவாக இருக்கிறார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள். அல்போன்சாவுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என பதில் மனுதாக்கல் செய்ய எதிர்தரப்பு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

 


Post your comment





Related News
பிரபல கவர்ச்சி நடிகை அல்போன்சா கைதாவாரா?
கவர்ச்சி நடிகை எஸ்கேப் : தேடுகிறது போலீஸ்!
காதலன் தற்கொலையால் முன்ஜாமீன் கேட்கிறார் நடிகை அல்போன்சா!
கவர்ச்சி நடிகை அல்போன்சா மீது பரபரப்பு புகார் !
மரணத்துக்கு முன் அழகை ரசித்த காதலன் : நடிகையின் பரபரப்பு வாக்கு மூலம்
கவர்சி நடிகையின் காதலர் தற்கொலை : நடிகையும் தற்கொலைக்கு முயற்சி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions