பிரபல கவர்ச்சி நடிகை அல்போன்சா கைதாவாரா?

Bookmark and Share

பிரபல கவர்ச்சி நடிகை அல்போன்சா கைதாவாரா?

பிரபல கவர்ச்சி நடிகை அல்போன்சா. தமிழ் படங்களில் பல்வேறு பாடல்களுக்கு நடனம் ஆடியுள்ளார். பாட்ஷா படத்தில் இடம் பெற்ற ரா... ரா... ரா... ராமையா பாடல் மூலம் புகழ் பெற்றவர் இவர்.

அல்போன்சா மீது மயிலாடுதுறையை சேர்ந்த சுஜாதா (32) (பெயர்மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண் நேற்று மாலை சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பான புகார் மனு ஒன்றை அளித்தார்.

அதில், சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த எனது கணவர் ஜெய்சங்கரை நடிகை அல்போன்சா அபகரித்து வைத்துள்ளார் என்றும், தற்போது அல்போன்சா என்னை போனில் தொடர்பு கொண்டு மிரட்டி வருகிறார் என்றும் குற்றம் சாட்டி இருந்தார்.

8 ஆண்டுகளாக காதலித்து கடந்த 2013–ம் ஆண்டு மருதமலை முருகன் கோவிலில் வைத்து நானும், ஜெய்சங்கரும் திருமணம் செய்து கொண்டோம்.

ஆனால் அல்போன்சா என்னை போனில் தொடர்பு கொண்டு, நான்தான் ஜெய்சங்கரை முதலில் திருமணம் செய்தேன். எனவே அவரை விட்டுவிட்டு ஓடி விடு. இல்லையென்றால் கொன்று விடுவேன் என்று அல்போன்சா மிரட்டல் விடுக்கிறார் என்றும் புகார் கூறினார்.

ஜெய்சங்கருக்கும், எனக்கும் நடந்த திருமண வரவேற்பில், நண்பர் என்ற முறையில் வந்து வாழ்த்தி விட்டு சென்ற அல்போன்சா எனது கணவரை தற்போது அபகரித்து வைத்துள்ளார். அவரிடமிருந்து கணவரை மீட்டு தருவதுடன், சட்டப்படி நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என்று சுஜாதா புகாரில் கூறியிருந்தார்.

இந்த புகார் மனுவுடன் வீடியோக்கள் மற்றும் போட்டோக்கள் சிலவற்றையும் கமிஷனர் அலுவலகத்தில் சுஜாதா தாக்கல் செய்துள்ளார். ஓட்டல் ஒன்றில் அல்போன்சாவும், ஜெய்சங்கரும் நெருக்கமாக கட்டிப்பிடித்தபடியே நடந்து செல்லும் வீடியோ காட்சி ஒன்றை சுஜாதா போலீசாரிடம் கொடுத்துள்ளார். அந்த வீடியோவில் அல்போன்சா நடனம் ஆடுகிறார். ஜெய்சங்கர் தனது பேஸ் புக்கில் அல்போன்சாவுடன் இருக்கும் போட்டோக்களையும் போட்டிருக்கிறார். அதில் அல்போன்சாவை எனது மனைவி என்று குறிப்பிட்டுள்ளார்.

நாம் சினிமாக்களில் கவர்ச்சியாகவே பார்த்து வந்த அல்போன்சா, ஜெய்சங்கருடன் இருக்கும் போட்டோவில், பச்சை கலர் பட்டுச்சேலையில் பளிச்சிடுகிறார். நெற்றியில் பொட்டு வைத்து, நெத்திச்சூடி அணிந்து காட்சி அளிக்கும் அவர் கழுத்து நிறைய நகைகளையும் அணிந்துள்ளார். ஜெய்சங்கர் அந்த போட்டோவில் பட்டுவேட்டி– சட்டை அணிந்துள்ளார்.

இளம்பெண் சுஜாதா அளித்திருக்கும் புகார் மனு குறித்து விசாரணை நடத்த கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார். அடையாறு துணை கமிஷனர் கண்ணன் மேற்பார்வையில் சைதாப்பேட்டை போலீசார் இந்த புகார் மனு குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பேஸ் புக்கில் இடம் பெற்றுள்ள போட்டோக்கள் மற்றும் அல்போன்சாவுடன் ஜெய்சங்கர் நெருக்கமாக இருக்கும் வீடியோ ஆகியவற்றை வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ஜெய்சங்கருடன் திருமணம் நடைபெற்றதற்கான ஆதாரங்களையும், சுஜாதா போலீசாரிடம் அளித்திருக்கிறார். அதில் முக்கியமாக திருமண போட்டோக்கள் இடம்பெற்றுள்ளன. நேற்று அளித்த புகார் தொடர்பாக சுஜாதாவிடம் இன்று விரிவாக விசாரணை நடத்தும் போலீசார் அதன் அடிப்படையில் அல்போன்சா மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளனர். 


Post your comment

Related News
கணவரை அபகரித்ததாக பெண் புகார்: நடிகை அல்போன்சாவுக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு?
கவர்ச்சி நடிகை எஸ்கேப் : தேடுகிறது போலீஸ்!
காதலன் தற்கொலையால் முன்ஜாமீன் கேட்கிறார் நடிகை அல்போன்சா!
கவர்ச்சி நடிகை அல்போன்சா மீது பரபரப்பு புகார் !
மரணத்துக்கு முன் அழகை ரசித்த காதலன் : நடிகையின் பரபரப்பு வாக்கு மூலம்
கவர்சி நடிகையின் காதலர் தற்கொலை : நடிகையும் தற்கொலைக்கு முயற்சி
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions