டைரக்டர் அல்போன்ஸ் புத்திரனுக்கு ஆக.22-ந்தேதி திருமணம்

Bookmark and Share

டைரக்டர் அல்போன்ஸ் புத்திரனுக்கு ஆக.22-ந்தேதி திருமணம்

தமிழில் 'நேரம்' படத்தை இயக்கியவர் அல்போன்ஸ் புத்திரன். மலையாள நடிகர் நிவின்பாலி, நஸ்ரியா நடித்த இந்த படம் அல்போன்ஸ் புத்திரனுக்கு வெற்றியை தேடி கொடுத்தது.

அதன் பிறகு மலையாளத்தில் 'பிரேமம்' படத்தை இயக்கி பிரபலமானார். வளர்ந்து வரும் டைரக்டர்கள் பட்டியலில் இவரும் இடம்பெற்றார். மேலும் பல படங்களை இயக்க பிரபல தயாரிப்பாளர்கள் இவரை ஒப்பந்தம் செய்தனர். பட வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்த அல்போன்ஸ் புத்திரன் திடீரென திருமண பந்தத்தில் இணைய உள்ளார்.

மலையாள பட உலகின் பிரபல தயாரிப்பாளர் ஆல்வின் ஆண்டனியின் மகள் அலினா மேரி ஆண்டனிக்கும், அல்போன்ஸ் புத்திரனுக்கும் வருகிற 22–ந்தேதி கேரள மாநிலம் ஆலுவாவில் திருமணம் நடக்க இருக்கிறது. இதற்கான நிச்சயதார்த்தம் கொச்சியில் நேற்று நடந்தது. திடீரென ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியில் மணமக்களின் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

திரையுலகில் இருந்து நஸ்ரியா நசீம், தயாரிப்பாளர் ஆன்றோ ஜோசப் ஆகியோர் மட்டுமே கலந்து கொண்டனர். நிச்சயதார்த்தம் முடிந்த பின்பு மலையாள திரையுலகின் பிரபல நடிகர்கள் மோகன்லால், மம்முட்டி, துல்கார் சல்மான், பகத் பாசில், பர்கான் பாசில் ஆகியோர் புதுமண ஜோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். 


Post your comment





Related News
ப்ரேமம் இயக்குனரின் அடுத்தப்படத்தின் ஹீரோக்கள் இவர்களா?
சினிமாவுக்கு வரிவிலக்கு: ரஜினி, கமலுக்கு பிரேமம் பட இயக்குனர் வேண்டுகோள்
சிம்புவை கலாய்த்த ரசிகர்- தெறி பதிலடி கொடுத்த பிரேமம் இயக்குனர்
`பிரேமம்' இயக்குநருடன் இணையும் மலையாள சூப்பர்ஸ்டாரின் மகன்?
ப்ரேமம் இயக்குனரின் அடுத்தப்படத்தின் ஹீரோ- அவரே சொல்கிறார்
மங்காத்தா போல் படம் எடுக்கவா இல்லை உலக அளவில் ஒரு படம் வேண்டுமா- பிரேமம் இயக்குனரின் கேள்வி
அஜித் வீட்டு வாசலில் 3 மணி நேரம் காத்திருந்தேன், தல-க்கே ஆப்பா? ப்ரேமம் இயக்குனர் சூப்பர் தகவல்
பிரபாஸிற்கு கதை ரெடி- தென்னிந்திய ரசிகர்களின் பேவரட் இயக்குனர் அறிவிப்பு
மூன்றாவது படம்- பிரேமம் இயக்குனர் வெளியிட்ட தகவல்
தல படம் எப்போது? ப்ரேமம் இயக்குனரின் அதிரடி பதில்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions