தமிழ் சினிமாவில் பேய் யுகம் நடக்கிறது: பட அதிபர் ஏ.எம்.ரத்னம்

Bookmark and Share

தமிழ் சினிமாவில் பேய் யுகம் நடக்கிறது: பட அதிபர் ஏ.எம்.ரத்னம்

புதுமுகங்கள் நடித்து தயாராகியுள்ள படம், ‘உனக்கென்ன வேணும் சொல்லு.’ இது ஒரு பேய் படம். இதன் பாடல்கள் வெளியீட்டு விழாவில் பாடல்களை பட அதிபர் ஏ.எம்.ரத்னம் வெளியிட, டைரக்டர் வெங்கட்பிரபு பெற்றுக் கொண்டார்.

விழாவில், பட அதிபர் ஏ.எம்.ரத்னம் பேசும்போது:- 

‘‘முன்பு பாம்புகளை வைத்து படம் தயாரித்தால், அந்த படம் நிச்சயம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருந்தது. பாம்புகளை வைத்து தயாரிக்கப்பட்ட படங்கள் வெள்ளிவிழா கொண்டாடின.

இப்போது பேய் கதைகளை படமாக்கினால் நிச்சயம் வெற்றி என்று சொல்லும் நிலை இருந்து வருகிறது. திகில் படங்கள் வரிசையாக வெற்றி பெற்று வருகின்றன.

தமிழ் பட உலகில் இப்போது பேய் யுகம் நடக்கிறது. பேய் படங்களில் நகைச்சுவையும் கலந்திருப்பதால், குழந்தைகள் ரசிக்கிறார்கள். பேய் இருக்கிறதா, இல்லையா? என்பது தெரியாது. ஆனால், பேய் படங்களின் வெற்றி ஆச்சரியப்பட வைக்கிறது.’’ இவ்வாறு அவர் பேசினார். 


Post your comment





Related News
சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
செக்கச்சிவந்த வானம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்
சமந்தா நடிக்க தடையா?
விஸ்வாசம் படத்தில் இணைந்த தெலுங்கு நடிகர்
பூஜையுடன் அடுத்த படத்தை துவங்கிய அரவிந்த்சாமி
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா
கீர்த்தி சுரேசை புகழும் சமந்தா
மகிமா நம்பியாருக்கு இப்படி ஒரு ஆசையா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions