கணவர் இயக்கத்தில் மீண்டும் அமலா பால்? பிரபுதேவா ஹீரோ

Bookmark and Share

கணவர் இயக்கத்தில் மீண்டும் அமலா பால்? பிரபுதேவா ஹீரோ

விக்ரம் பிரபு, கீர்த்தி சுரேஷ் நடிக்கும் 'இது என்ன மாயம்' படத்திற்குப் பிறகு விஜய், பிரபுதேவா தயாரித்து நாயகனாக நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். இந்தப் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் அமலா பாலை நடிக்க வைத்தால் நன்றாக இருக்கும் என பிரபுதேவா சொன்னதை விஜய்யும் ஏற்றுக் கொண்டுள்ளாராம்.

இப்போது கணவர் விஜய் இயக்கத்தில் 'தெய்வத் திருமகள், தலைவா' படங்களுக்குப் பிறகு மீண்டும் அமலா பால் நடிக்க உள்ளார். திருமணத்திற்குப் பிறகும் அமலா பால் தொடர்ந்து தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் நடித்து வருகிறார்.

ஹிந்திப் படங்களைத் தொடர்ந்து இயக்கிக் கொண்டிருக்கும் பிரபுதேவா திடீரென தமிழில் படங்களைத் தயாரித்து நடிக்க முடிவு செய்துள்ளார். அதன் முதல் கட்டமாக அவரே நாயகனாக நடிக்கும் படத்தை முதலில் தயாரிக்க உள்ளார்.

அதன் பின் முன்னணி நடிகர்கள், மற்ற இயக்குனர்கள் இயக்கும் படங்களையும் தயாரிக்க உள்ளார் என்கிறார்கள். பிரபுதேவா மீண்டும் நடனமாடி, இளம் நாயகனாக நடிப்பாரா அல்லது கொஞ்சம் மெச்சூரிட்டியான கதாபாத்திரங்களில் நடிப்பாரா என்பது பற்றி இனிமேல்தான் தெரிய வரும் என்கிறார்கள்.

 


Post your comment





Related News
கமல் கட்சியில் சேர ஆர்வம் இருக்கிறது - ஷகிலா
கமலுக்கு பேரனாகும் சிம்பு
இந்தியன் 2 படத்தின் 2 நிமிட காட்சிக்கு எத்தனை கோடியில் செட் தெரியுமா?
நம் நட்பும், வெற்றிகளும் தொடரட்டும் - ரஜினிக்கு கமல் பிறந்தநாள் வாழ்த்து
சினிமாவுக்கு முழுக்கு: ‘தேவர் மகன்-2’ படத்தில் கமலுக்கு பதில் வேறு கதாநாயகன்?
அடுத்த வாரம் துவங்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு - நாயகியாக காஜல் அகர்வால்
அதோ அந்த பறவை போல டப்பிங்கில் பிசியான அமலாபால்
பிரபுதேவா எனது குரு - இந்துஜா
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions