முழு நேரம் சினிமாவில் நான் நடிக்க மாட்டேன்: அமலா

Bookmark and Share

முழு நேரம் சினிமாவில் நான் நடிக்க மாட்டேன்: அமலா

ரஜினி, கமல் உள்பட முன்னணி நாயகர்கள் அனைவருடனும் நடித்தவர் அமலா. இப்போது நீண்ட இடை வெளிக்குப்பிறகு கமல் ஜோடியாக அமலா நடிக்கிறார். தமிழ், தெலுங்கில் உருவாகும் ‘அப்பா அம்மா விளையாட்டு’ படத்தில் அமலா, கமல் மனைவியாக வருகிறார்.

‘கமலுடன் நான் மீண்டும் நடிப்பதை என்னால் நம்பவே முடியவில்லை. கமல் என்னிடம் நடிக்கிறாயா என்று கேட்டார். நான் அவரிடம் சரி என்று சொன்னேன். 

இதையடுத்து என்னிடம் கதை சொல்ல மலையாள டைரக்டர் ராஜீவ் குமாரை அனுப்பி வைத்தார். அவர் சொன்ன கதை எனக்கு பிடித்து இருந்தது. பொருத்தமான கதை. இதன் படப்பிடிப்பு அமெரிக்காவில் நடக்க இருக்கிறது. பிப்ரவரியில் படப்பிடிப்பு தொடங்கும் என்று நினைக்கிறேன்.

இந்த படத்தில் கமலுடன் நடிப்பது பற்றி நினைக்கும் போதே ஆர்வமாக இருக்கிறது. ஆனால் ஏற்கனவே நான் பிசியாக இருக்கிறேன். நிறைய வேலைகள் இருக்கின்றன. எனவே சிறப்பு வேடத்தில் மட்டும் நடிப்பேன். 

முழு நேரம் நடிக்க முடியாது. பொருத்தமான வேடங்கள் கிடைத்தால் நடிப்பேன். சினிமாவில் இருந்து தான் எல்லாவற்றையும் கற்றுக் கொண்டேன். எனவே, சினிமாவில் நடிப்பேன் என்றாலும் தேர்வு செய்த குறிப்பிட்ட வேடங்களில் மட்டுமே நடிப்பேன்’ என்றார் அமலா.


Post your comment





Related News
அடுத்த சன்னிலியோன் நீங்கதான் - அமலாபாலை விமர்சித்த ரசிகர்கள்
விஷாலை மிரள வைத்த அமலாபால்
எதுவாக இருந்தாலும் 2 நாள்தான் - அமலாபால்
மேயாத மான் இயக்குனருடன் இணையும் அமலாபால்..!
முதல் முறையாக தமிழுக்கு வரும் வட இந்திய கிரிக்கெட் பிரபலம் !!
இயக்குனர் விஜய்க்கு இரண்டாவது திருமணம்! பெண் யார்?
நம்மை பற்றி வரும் கிசுகிசுக்கள் நல்லது தான் - அமலாபால்
அமலாபால் நடிக்கும் "அதோ அந்த பறவை போல" ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட காஜல் அகர்வால் !
தொண்டு நிறுவனத்தை ஆரம்பித்த அமலாபால் - அதிர்ச்சியூட்டும் காரணம்.!
காதலில் விழுந்த அமலா பால் - வைரலாகும் புகைப்படம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions