மீண்டும் ஹிந்தி படத்தில் நடித்த அமலா

Bookmark and Share

மீண்டும் ஹிந்தி படத்தில் நடித்த அமலா

தமிழ் நடிகையான அமலா தமிழைக் காட்டிலும் தெலுங்கில் அதிக படங்களில் நாயகியாக நடித்துள்ளார். பிரபல நடிகர் நாகார்ஜுனாவை திருமணம் செய்துகொண்டு டோலிவுட்டிலேயே தங்கி விட்ட அமலா தமிழில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் சின்னத்திரையில் தலைகாட்டினார். தற்போது அவர் ஹிந்தி படங்களிலும் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றார்.

நடிகை வித்யா பாலன் நடிப்பில் நேற்று வெளிவந்த ஹமாரி அதுரி கஹானி படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்த அமலா மீண்டும் ஹிந்தி படத்தில் நடிக்கவுள்ளார் என்று கூறப்படுகின்றது.

1980 மற்றும் 1990களில் பல ஹிந்தி படங்களில் நடித்துள்ள அமலா, இயக்குநர் ராம்கோபால் வர்மா இயக்கத்தில் நடித்த சிவா எனும் படம் ஹிந்தியிலும் வெளிவந்தது. அதுவே நாயகியாக அவர் நடித்த கடைசி ஹிந்தி படமாகும்.

அதன் பின்னர் நீண்ட இடைவெளிக்கு பின்னர் 2013 ஆம் ஆண்டு லிசன் அமையா படத்தில் அமலா நடித்திருந்தார். தற்போது மீண்டும் இயக்குநர் மோஹித் சூரி இயக்கியுள்ள ஹமாரி அதுரி கஹானி படத்தில் அமலா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். 

 


Post your comment





Related News
எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபடுவேன் - அமலாபால்
அடுத்த சன்னிலியோன் நீங்கதான் - அமலாபாலை விமர்சித்த ரசிகர்கள்
விஷாலை மிரள வைத்த அமலாபால்
எதுவாக இருந்தாலும் 2 நாள்தான் - அமலாபால்
மேயாத மான் இயக்குனருடன் இணையும் அமலாபால்..!
முதல் முறையாக தமிழுக்கு வரும் வட இந்திய கிரிக்கெட் பிரபலம் !!
இயக்குனர் விஜய்க்கு இரண்டாவது திருமணம்! பெண் யார்?
நம்மை பற்றி வரும் கிசுகிசுக்கள் நல்லது தான் - அமலாபால்
அமலாபால் நடிக்கும் "அதோ அந்த பறவை போல" ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட காஜல் அகர்வால் !
தொண்டு நிறுவனத்தை ஆரம்பித்த அமலாபால் - அதிர்ச்சியூட்டும் காரணம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions