தமிழ் படத்தில் நடிக்கும் அமலா மகன்

Bookmark and Share

தமிழ் படத்தில் நடிக்கும் அமலா மகன்

நாகார்ஜுனா– அமலா தம்பதியரின் இளைய மகன் அகில்.

பிரபல தெலுங்கு நடிகர் நாகேஷ்வரராவ், அவரது மகன் நாகார்ஜுனா, பேரன்கள் சைதன்யா, அகில் ஆகியோர் நடிப்பில் வெளியான படம் ‘மனம்’ 3 தலைமுறை நடிகர்கள் இணைந்து நடித்த இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

இந்த படத்தில் அகில் சிறிய வேடத்தில் நடித்து இருந்தார். தற்போது அகில் கதாநாயகனாக நடித்த படம் அவரது பெயரிலேயே தீபாவளிக்கு ரிலீஸ் ஆனது. இதில் தண்ணீருக்குள் சாகசம், பறக்கும் விமானத்தில் சண்டை என்று நாயகன் அகில் அட்டகாசப்படுத்தியுள்ளார்.

இந்த படம் இப்போது தமிழில் மொழிமாற்றம் செய்யப்படுகிறது. தமிழில் வெளியாகும் இந்த படத்துக்கு ‘சூரிய கவசம்’ என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இது தமிழில் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.

இதுதவிர இனி அகில் நடிக்கும் படங்கள் அனைத்தையும் தெலுங்கு, தமிழ் ஆகிய இரண்டு மொழிகளிலும் தயாரித்து வெளியிட முடிவு செய்துள்ளனர்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions