ஒரே நேரத்தில் தமிழ், மலையாளத்தில் புது அவதாரம் எடுக்கும் அமலா பால்

Bookmark and Share

ஒரே நேரத்தில் தமிழ், மலையாளத்தில் புது அவதாரம் எடுக்கும் அமலா பால்

நடிகை அமலா பால் பாடகி அவதாரம் எடுக்கத் தயாராகிவிட்டார். அமலா பாலின் திருமண வாழ்க்கை கசந்து விவாகரத்தில் முடிந்துவிட்டது.

இதையடுத்து அவர் படங்களில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார். அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு சினிமாவை தவிர தனக்கு வேறு நினைப்பு இல்லை என்று அமலா தெரிவித்துள்ளார்.அமலா அச்சயான்ஸ் என்ற மலையாள படத்தில் நடிக்கிறார்.

கண்ணன் இயக்கும் அச்சயான்ஸ் படத்தில் ஜெயராம், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். அமலா பால், அனு சித்தாரா ஹீரோயின்களாக நடிக்கிறார்கள்.அச்சயான்ஸ் படம் மூலம் அமலா பால் பாடகி அவதாரம் எடுக்கிறார். ஆம், இந்த படத்தில் அவர் பாடல் ஒன்றை பாடுகிறார்.

அதற்கான பயிற்சியில் அவர் ஈடுபட்டுள்ளார்.ஹிட்டான திருட்டுப் பயலே படத்தின் இரண்டாம் பாகத்தை சுசி கணேசன் இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஒரு பாட்டு பாடுமாறு சுசி அமலாவை கேட்டாராம். அமலாவும் பாட சம்மதித்துள்ளாராம்.

அமலா தனுஷுடன் வட சென்னை, வேலையில்லா பட்டதாரி 2, சின்ட்ரெல்லா, திருட்டுப் பயலே 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மேலும் ஒரு மலையாள படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.


Post your comment





Related News
நயன்தாரா நடிக்க மறுத்த படத்தில் அமலாபால்
நயன்தாரா ரூட்டில் செல்லும் அமலா பால்
தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகும் அமலாபாலின் தம்பி
தனுஷ் செம்ம திறமையானவர், ஏன் தெரியுமா? அமலா பால் ஓபன் டாக்
தனுஷ் பலவித திறமை கொண்டவர்: அமலாபால்
தனுஷுடன் இணைந்த நிவின்பாலி- ஆனால்?
ஏமாற்றிய ஏ.எல்.விஜய்? மீண்டும் களத்தில் அமலா பால் தம்பி
மக்களுக்கு திருப்பிக்கொடுக்கும் நேரமிது- அமலா பாலின் எதிர்க்கால திட்டம்
தொழில் அதிபராக மாறப்போகிறேன்: அமலாபால்
தனுஷ், அமலா பாலின் அந்தரங்க வீடியோவை வெளியிடும் சுசித்ரா!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions