தனது முதல் படத்தை முடித்த அமலாபால்!

Bookmark and Share

தனது முதல் படத்தை முடித்த அமலாபால்!

தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நடிகை அமலாபால், பிரபுதேவாவுடன் இணைந்து தனது கணவரின் குருநாதரான பிரியதர்ஷனை வைத்து புதிய படத்தை தொடங்கினார். 
இதில் அசோக் செல்வன், ஸ்ரேயா ரெட்டி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இப்படத்திற்கு ‘சில நேரங்களில்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். தேசிய விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வென்ற ‘காஞ்சிவரம்’ படத்திற்கு பிறகு பிரகாஷ்ராஜ்-பிரியதர்ஷன் இணைந்துள்ள படம் என்பதால் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. 

ஜூலை மாதம் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்துவிட்டதாக இப்படத்தின் தயாரிப்பாளரான அமலாபால் தனது டுவிட்டர் பக்கத்தில் இறுதிநாள் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

படத்தின் இசையமைப்பாளர் யார் என்பது முடிவு செய்யப்படாமலேயே படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. முதலில் ஏ.ஆர்.ரகுமான்தான் இப்படத்துக்கு இசையமைக்கப் போவதாக வெளிவந்த செய்திக்கு, படத்தை முடித்துவிட்டு ஏ.ஆர்.ரகுமானிடம் போட்டு காண்பிப்போம். 

அவருக்கு பிடித்திருந்தால் இப்படத்திற்கு அவர் இசையமைப்பார் என்று ஏ.எல்.விஜய் கூறியிருந்தார். அதன்படி, விரைவில் இப்படத்தை ஏ.ஆர்.ரகுமானுக்கு திரையிட்டு காண்பிப்பார்கள் என தெரிகிறது.


Post your comment





Related News
எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபடுவேன் - அமலாபால்
அடுத்த சன்னிலியோன் நீங்கதான் - அமலாபாலை விமர்சித்த ரசிகர்கள்
விஷாலை மிரள வைத்த அமலாபால்
எதுவாக இருந்தாலும் 2 நாள்தான் - அமலாபால்
நடிகர் நிவின் பாலி ஒரு உருக்கமான அறிக்கை
மேயாத மான் இயக்குனருடன் இணையும் அமலாபால்..!
பாகுபலி பாணியில் உருவாகியுள்ள மோகன்லால், நிவின் பாலியின் காயம்குளம் கொச்சூன்னி.!
முதல் முறையாக தமிழுக்கு வரும் வட இந்திய கிரிக்கெட் பிரபலம் !!
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
இயக்குனர் விஜய்க்கு இரண்டாவது திருமணம்! பெண் யார்?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions