டைரக்டர் ஜோஷியிடம் விடைபெற்றார் அமலாபால்..!

Bookmark and Share

டைரக்டர் ஜோஷியிடம் விடைபெற்றார் அமலாபால்..!

கிட்டத்தட்ட 34 வருஷங்களாக மலையாள சினிமாவின் முடிசூடா மன்னனாக இருக்கிற ஜோஷி மலையாளத்தில் அனைத்து ஹீரோக்களையும் வைத்து படம் இயக்கியவர்.

மலையாள முன்னணி நடிகர்கள் அத்தனைபேரையும் வைத்து 2008ல் இவர் டைரக்ட் பண்ணின 20-20 திரைப்படத்தை பார்த்தால் போதும்.. இவர் எவ்வளவு பெரிய ஆள் என்பதை அந்த படமே சொல்லிவிடும்.  

அவர் இயக்கத்தில் நடிக்க வாய்ப்பு கிடைப்பது என்பதே ஒரு வரம் போலத்தான். அந்த வாய்ப்பு அமலாபாலுக்கு இரண்டாவது முறையாக கிடைத்தது வரமல்ல.. அதுக்கும் மேல.. தற்போது மோகன்லாலை வைத்து 'லைலா ஓ லைலா' என்கிற படத்தை இயக்கிவருகிறார்.

'ரன் பேபி ரன்' என்கிற ஹிட்டுக்கு பிறகு, மீண்டும் ஜோஷியின் டைரக்சனில், மீண்டும் மோகன்லாலுக்கு ஜோடியாக இந்தப்படத்தில் அமலாபால் நடித்திருக்கிறார். இது திருமணத்திற்கு முன்பே அமலாபால் கமிட்டான படம்..

தற்போது இந்தப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, ஜோஷியிடம் விடைபெற்றுள்ளார் அமலாபால். படத்தின் போஸ்ட் புரொடக்சன் வேலைகளும் ஆரம்பித்துவிட்டன. இனி அமலாபால் முன்பு போல படங்களில் தொடர்ந்து நடிப்பாரா என்பது கேள்விக்குறிதான்.


Post your comment





Related News
அதோ அந்த பறவை போல டப்பிங்கில் பிசியான அமலாபால்
எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபடுவேன் - அமலாபால்
அடுத்த சன்னிலியோன் நீங்கதான் - அமலாபாலை விமர்சித்த ரசிகர்கள்
விஷாலை மிரள வைத்த அமலாபால்
எதுவாக இருந்தாலும் 2 நாள்தான் - அமலாபால்
நடிகர் நிவின் பாலி ஒரு உருக்கமான அறிக்கை
மேயாத மான் இயக்குனருடன் இணையும் அமலாபால்..!
பாகுபலி பாணியில் உருவாகியுள்ள மோகன்லால், நிவின் பாலியின் காயம்குளம் கொச்சூன்னி.!
முதல் முறையாக தமிழுக்கு வரும் வட இந்திய கிரிக்கெட் பிரபலம் !!
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions