அமலாபாலை ஏமாற்றிய படம்!

Bookmark and Share

அமலாபாலை ஏமாற்றிய படம்!

டைரக்டர் ஏ.எல்.விஜய்யை திருமணம் செய்து கொள்வதற்கு முன்பே அமலாபால் ஒத்துக்கொண்ட இரண்டு மலையாள படங்களில் ஒன்று மிலி. அந்த படத்தில் நேரம் பட நாயகன் நிவின் பாலியுடன் நடித்திருந்தார் அமலாபால்.

அதோடு பள்ளி மாணவி கேரக்டரில் நடித்தார். அந்த வகையில், திருமணத்திற்கு பிறகு மாணவி வேடத்தில் நடித்த பெருமை பெற்ற அமலாபால் அந்த படத்தை ரொம்பவே எதிர்பார்த்தார். ஆனால் படம் சரியாக ஓடவில்லை.

தமிழ், தெலுங்கு படங்களை விட அந்த படத்துக்காக அதிக நாட்கள் கால்சீட் கொடுத்து நடித்தார் அவர். அதோடு திருமணத்திற்கு பிறகு நடித்ததால் உடம்பு பெருத்து விடக்கூடாது என்று அதிக டயட்ஸ் கடைபிடித்தும் நடித்தார்.

இப்படி அவர் கஷ்டப்பட்டு நடித்த படம் எதிர்பார்த்தபடி ஓடாததால் பெரிய அளவில் ஏமாற்றமடைந்தாராம் அமலாபால். இருப்பினும் இப்போது அந்த எதிர்பார்ப்பை மோகன்லாலுடன் நடித்துள்ள லைலா ஓ லைலா படத்தின் மீது திருப்பியிருக்கிறார் அமலாபால்.

மோகன்லாலுடன் ஜோடியாக நடிக்கும் படம் என்பதால், இந்த படத்தை தனது கேரியரில் முக்கிய படமாக இருக்கும் என்றும் நினைக்கும் அமலாபால், சூர்யாவுடன் நடிக்கும் ஹைகூ படத்தையும் பெரிதாகவே நினைக்கிறார்.

காரணம் அந்த படத்தில் சிறிய வேடம் என்றாலும், சூர்யாவுடன் நடிக்கிற முதல் படம் என்பதால் ஹைகூவும் எனக்கு முக்கியமான படம்தான் என்கிறார்.


Post your comment





Related News
அடுத்த சன்னிலியோன் நீங்கதான் - அமலாபாலை விமர்சித்த ரசிகர்கள்
விஷாலை மிரள வைத்த அமலாபால்
எதுவாக இருந்தாலும் 2 நாள்தான் - அமலாபால்
நடிகர் நிவின் பாலி ஒரு உருக்கமான அறிக்கை
மேயாத மான் இயக்குனருடன் இணையும் அமலாபால்..!
பாகுபலி பாணியில் உருவாகியுள்ள மோகன்லால், நிவின் பாலியின் காயம்குளம் கொச்சூன்னி.!
முதல் முறையாக தமிழுக்கு வரும் வட இந்திய கிரிக்கெட் பிரபலம் !!
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
இயக்குனர் விஜய்க்கு இரண்டாவது திருமணம்! பெண் யார்?
நம்மை பற்றி வரும் கிசுகிசுக்கள் நல்லது தான் - அமலாபால்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions