அரைமணி நேரம் நடிப்பதற்காக 1400 கிமீ பயணம் செய்த அமலாபால்..!

Bookmark and Share

அரைமணி நேரம் நடிப்பதற்காக 1400 கிமீ பயணம் செய்த அமலாபால்..!

அமலாபாலை பொறுத்தவரை, அவருடைய தொழில் பக்தியை யாரும் குறைசொல்ல முடியாது. திருமணத்திற்கு பின்னும் கூட நடிப்பில் அதே சிரத்தை தான் காட்டிவருகிறார்.

தற்போது ஜோஷி டைரக்சனில் மோகன்லாலுடன் இணைந்து 'லைலா ஓ லைலா' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார் அமலாபால். படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில் சமீபத்தில், பேட்ச் ஒர்க் எனப்படும் சில விடுபட்ட காட்சிகளை கர்நாடக மாநிலம் பெல்லாரியில் படமாக்கினார் ஜோஷி.

அந்த காட்சியில் மோகன்லாலும் அமலாபாலும் சேர்ந்து நடிக்கவேண்டி இருந்தது. மோகன்லால் வந்துவிட்டார். அதில் ஆச்சர்யம் இல்லை. ஆனால் அன்றைய தினம் தமிழில் 'ஹைக்கூ' என்கிற படத்தில் நடிக்கவேண்டி இருந்த அமலாபால், அவர்களிடம் அனுமதி வாங்கிக்கொண்டு பெல்லாரிக்கு பறந்திருக்கிறார்.

அதுதான் ஆச்சர்யம்.  இத்தனைக்கும் அவர் நடிக்க வேண்டிய காட்சி அரை மணி நேரத்தில் படமாக்கப்பட்டு விட்டது. ஆனால் இதற்காக ஒரே நாளில் அவர் பயணம் செய்த தூரம் 1400 கிமீ. அமலாபாலின் வருகையால் மோகன்லாலும் ஜோஷியும் கூட ஆச்சர்யமடைந்து அவரை மனமார பாராட்டினார்களாம்.


Post your comment





Related News
எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபடுவேன் - அமலாபால்
அடுத்த சன்னிலியோன் நீங்கதான் - அமலாபாலை விமர்சித்த ரசிகர்கள்
விஷாலை மிரள வைத்த அமலாபால்
எதுவாக இருந்தாலும் 2 நாள்தான் - அமலாபால்
நடிகர் நிவின் பாலி ஒரு உருக்கமான அறிக்கை
மேயாத மான் இயக்குனருடன் இணையும் அமலாபால்..!
பாகுபலி பாணியில் உருவாகியுள்ள மோகன்லால், நிவின் பாலியின் காயம்குளம் கொச்சூன்னி.!
முதல் முறையாக தமிழுக்கு வரும் வட இந்திய கிரிக்கெட் பிரபலம் !!
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
இயக்குனர் விஜய்க்கு இரண்டாவது திருமணம்! பெண் யார்?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions