பிரியதர்ஷன் இயக்கும் படத்தை தயாரிக்கும் அமலா பால்

Bookmark and Share

பிரியதர்ஷன் இயக்கும் படத்தை தயாரிக்கும் அமலா பால்

இந்திய சினிமா இயக்குனர்களில் தனிச் சிறப்பு பெற்றவர் இயக்குனர் பிரியதர்ஷன். இளமைத் துள்ளும் எண்ணங்களைக் கொண்ட இயக்குனர் பிரியாதர்ஷன் மொழி, எல்லைகள் கடந்து பல்வேறு வயதினரை ரசிகர்களாக கொண்டுள்ளார்.

பிரியதர்ஷன் தனது அடுத்த படைப்பை தனது சிஷ்யரான இயக்குனர் விஜய்யின் திங்க் பிக் ஸ்டூடியோஸ் நிறுவனத்திற்காக இயக்குகிறார். இயக்குனர் விஜய்யின் மனைவியும், நடிகையுமான அமலா பால், பெயர் சூட்டப்படாத இப்படத்தின் மூலம் தயாரிப்பாளர் ஆகிறார்.

'சைவம்' மற்றும் வெளிவர தயாராகி வரும் ‘நைட் ஷோ’ திரைப்படங்களை தொடர்ந்து திங்க் பிக் ஸ்டூடியோஸ் சார்பில் ஏ.எல்.அழகப்பன் மற்றும் அமலா பால் விஜய் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் பூஜை சென்னையில் இன்று நடந்தது.

தன் நடிப்பால் கதாபாத்திரங்களாகவே வாழும் பிரகாஷ் ராஜ், ஸ்ரேயா ரெட்டி ஆகியோர் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்கவுள்ளது. சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவில் இப்படம் சர்வதேச ரசிகர்களையும் ரசிக்க வைக்கும் படைப்பாக உருவாகவுள்ளது. தேசிய அளவில் அனைவராலும் பாராட்டப்படும் சாபு சிரில் இப்படத்தின் புரொடக்‌ஷன் டிசைனராக பண்ணியாற்றவுள்ளார்.

அமலா பால் விஜய் இத்தயாரிப்பைப் பற்றி கூறுகையில், “நான் தயாரிக்கும் முதல் படமே சர்வதேச ரசிகர்களுக்கான படமாய் தயாராகவுள்ளது. ப்ரியதர்ஷன், சந்தோஷ் சிவன், பிரகாஷ் ராஜ், ஸ்ரேயா ரெட்டி என தரமான கலைஞர்கள் இருப்பது இப்படத்திற்கு பெரிய பலம். ஆகஸ்ட் மாத மத்தியில் படப்பிடிப்பை தொடங்கவுள்ளோம். எங்கள் திங்க் பிக் ஸ்டூடியோஸ் தயாரிப்பு நிறுவனத்திற்கு இப்படம் சர்வதேச அங்கீகாரத்தை பெற்றுத்தரும்.” என நம்பிக்கை பொங்கும் புன்னகையுடன் கூறினார்.


Post your comment





Related News
அடுத்த சன்னிலியோன் நீங்கதான் - அமலாபாலை விமர்சித்த ரசிகர்கள்
விஷாலை மிரள வைத்த அமலாபால்
எதுவாக இருந்தாலும் 2 நாள்தான் - அமலாபால்
நடிகர் நிவின் பாலி ஒரு உருக்கமான அறிக்கை
மேயாத மான் இயக்குனருடன் இணையும் அமலாபால்..!
பாகுபலி பாணியில் உருவாகியுள்ள மோகன்லால், நிவின் பாலியின் காயம்குளம் கொச்சூன்னி.!
முதல் முறையாக தமிழுக்கு வரும் வட இந்திய கிரிக்கெட் பிரபலம் !!
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
இயக்குனர் விஜய்க்கு இரண்டாவது திருமணம்! பெண் யார்?
நம்மை பற்றி வரும் கிசுகிசுக்கள் நல்லது தான் - அமலாபால்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions