பிரபல நடிகையின் தம்பி வில்லன் ஆனார்!

Bookmark and Share

பிரபல நடிகையின் தம்பி வில்லன் ஆனார்!

நடிகை அமலாபாலின் தம்பி அபிஜித் பால். சில மலையாளப் படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துள்ளார். சினிமாவில் முக்கிய இடம் பிடிக்க வேண்டும் என்பது இவரது ஆசை.

இதற்காக தனது அக்காவிடம் நடிப்பு பயிற்சி பெற்றார். இது தவிர நடன பயிற்சி, சண்டை பயிற்சியும் பெற்று வந்தார். இந்த நிலையில் அமலாபால் கணவர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு, இந்தியில் தயாராகும் ‘தேவி’ படத்தில் அபிஜித் பால் வில்லனாக நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

பிரபுதேவா–தமன்னா ஜோடியாக நடிக்கும் இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது பற்றி அபிஜித் பால் கூறுகிறார்...

“என் அக்காள் கணவர் திடீர் என்று ஒரு நாள் என்னிடம் படத்தில் வில்லனாக நடிக்கிறாயா என்று கேட்டார். உடனே மகிழ்ச்சியுடன் ஒப்புக் கொண்டேன். ‘தேவி’ படத்தில் நடிக்கத் தொடங்கினேன்.

ஏற்கனவே அக்காவிடம் நடிப்பு பயிற்சி பெற்றதால் எளிதாக நடிக்க முடிந்தது. முதல் படமே வில்லனா? என்று நண்பர்கள் கேட்டார்கள். புகழ் பெற்ற ஹீரோக்கள் எல்லோருமே வில்லனாக இருந்து ஹீரோக்கள் ஆனவர்கள்தானே என்று அவர்களுக்கு பதில் சொன்னேன். அக்காவை போல் நடிப்பில் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறேன்.”

இந்த படத்தில் நடிக்கும் அபிஜித் மீது அக்கறை கொண்டுள்ள அமலாபால், தம்பி நடிக்கும் இடத்துக்கே சென்று நடிப்பு சொல்லிக் கொடுக்கிறார். சிறப்பான நடிப்பை அபிஜித் வெளிப்படுத்துகிறார் என்று படக்குழுவினர் தெரிவித்தனர். அடுத்த படத்துக்கு புது கதாநாயகன் தயாராகிறார்.


Post your comment





Related News
எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபடுவேன் - அமலாபால்
அடுத்த சன்னிலியோன் நீங்கதான் - அமலாபாலை விமர்சித்த ரசிகர்கள்
விஷாலை மிரள வைத்த அமலாபால்
எதுவாக இருந்தாலும் 2 நாள்தான் - அமலாபால்
நடிகர் நிவின் பாலி ஒரு உருக்கமான அறிக்கை
மேயாத மான் இயக்குனருடன் இணையும் அமலாபால்..!
பாகுபலி பாணியில் உருவாகியுள்ள மோகன்லால், நிவின் பாலியின் காயம்குளம் கொச்சூன்னி.!
முதல் முறையாக தமிழுக்கு வரும் வட இந்திய கிரிக்கெட் பிரபலம் !!
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
இயக்குனர் விஜய்க்கு இரண்டாவது திருமணம்! பெண் யார்?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions