மோகன்லாலுடன் மோதும் காஷ்மீர் வில்லன்..!

Bookmark and Share

மோகன்லாலுடன் மோதும் காஷ்மீர் வில்லன்..!

ஒரு படம் ஹிட்டானால் அடுத்த படத்திலும் அந்த கூட்டணி தொடர்வதுதானே வழக்கம். இதற்கு மலையாள சினிமா மட்டும் விதிவிலக்காகி விடுமா என்ன? அந்த வகையில் பிரபல மலையாள இயக்குனர் ஜோஷி  இயக்கி கடந்த 2012ல் வெளியான சூப்பர்ஹிட் படம் 'ரன் பேபி ரன்'.  

இந்தப்படத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக நடித்திருந்தார் அமலாபால்..  தற்போது மீண்டும் ஜோஷியின் டைரக்ஷனில் 'லைலா ஓ லைலா' என்கிற படத்தில் நடித்து வருகிறார் மோகன்லால்.

இதிலும் மோகன்லாலுடன் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளார் அமலாபால். இந்தப்படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பை மும்பையில் நடத்தியுள்ளார் ஜோஷி. இந்தப்படத்தில் மோகன்லாலுக்கு வில்லனாக நடிப்பவர் ஜூனைத் ஷேக்.. காஷ்மீரை சேர்ந்த இவர் ஏற்கனவே சுரேஷ்கோபி, ஜெயராமை வைத்து கடந்த வருடம் ஜோஷி இயக்கிய 'சலாம் காஷ்மீர்' என்கிற படத்தில் தீவிரவாதியாக நடித்தவர்தான்.

அந்தப்படத்தில் ஜூனைத்தின் நடிப்பு ஜோஷியை மிகவும் கவர்ந்துவிட்டதால், இந்தப்படத்தில் மெயின் வில்லனாக புரமோஷன் கொடுத்துவிட்டார். அதுமட்டுமல்ல, சமீபத்தில் வெளியான ஜூனியர் என்.டி.ஆரின் 'டெம்பர்' படத்திலும் அவருடன் மோதியவர் தான் ஜூனைத்.. சமீபத்தில் மோகன்லாலுடன் இவர் மோதும் ஆக்சன் காட்சிகள் கொச்சியில் படமாக்கப்பட்டன.

காமெடி கலந்த த்ரில்லராக உருவாகி இருக்கும் 'லைலா ஓ லைலா' படத்தின் கதையை எழுதியிருப்பவர் இந்தியில் வெற்றிபெற்ற 'கஹானி' மற்றும் 'டி-டே' ஆகிய படங்களின் கதாசிரியரான சுரேஷ் நாயர். அதனால் இந்தப்படம் ஜோஷியின் முந்தைய படங்களில் இருந்து மாறுபட்டு இருக்குமாம் 


Post your comment





Related News
அதோ அந்த பறவை போல டப்பிங்கில் பிசியான அமலாபால்
எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபடுவேன் - அமலாபால்
அடுத்த சன்னிலியோன் நீங்கதான் - அமலாபாலை விமர்சித்த ரசிகர்கள்
விஷாலை மிரள வைத்த அமலாபால்
எதுவாக இருந்தாலும் 2 நாள்தான் - அமலாபால்
நடிகர் நிவின் பாலி ஒரு உருக்கமான அறிக்கை
மேயாத மான் இயக்குனருடன் இணையும் அமலாபால்..!
பாகுபலி பாணியில் உருவாகியுள்ள மோகன்லால், நிவின் பாலியின் காயம்குளம் கொச்சூன்னி.!
முதல் முறையாக தமிழுக்கு வரும் வட இந்திய கிரிக்கெட் பிரபலம் !!
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions