வலி ரொம்ப வலி ஆனால் தற்போது நான் மகிழ்ச்சியாக உள்ளேன்: அமலா பால்

Bookmark and Share

வலி ரொம்ப வலி ஆனால் தற்போது நான் மகிழ்ச்சியாக உள்ளேன்: அமலா பால்

கணவர் விஜய்யை பிரிந்தபோது மன வலி அதிகமாக இருந்ததாகவும் தற்போது தான் மகிழ்ச்சியாக உள்ளதாகவும் நடிகை அமலா பால் தெரிவித்துள்ளார். நடிகை அமலா பால் தனது காதல் கணவரான இயக்குனர் ஏ.எல். விஜய்யை பிரிந்தார். நம்பிக்கை தவறாக பயன்படுத்தப்பட்டதாக விவாகரத்து குறித்து விஜய் தெரிவித்தார். 

இந்நிலையில் இது பற்றி அமலா கூறுகையில்,

மதம், ஜாதி, கலாச்சாரத்தை தாண்டி உலக மக்கள் அனைவரும் கொண்டாடும் பண்டிகை கிறிஸ்துமஸ். நான் கிறிஸ்துமஸ் பண்டிகையை எப்பொழுதும் என் குடும்பத்தாருடன் கொண்டாடுவேன்.என் தந்தை கடந்த ஆண்டு மருத்துவமனையில் இருந்ததால் கிறிஸ்துமஸ் பண்டிகையை டாக்டர்கள், நர்ஸுகளுடன் கொண்டாடினோம்.

இந்த ஆண்டு கொச்சியில் உள்ள வீட்டில் உறவினர்களுடன் கொண்டாடுகிறோம்.என் கை நிறைய படங்கள் உள்ளன. படப்பிடிப்பு தளத்தில் இருக்கும்போது தான் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்பதை உணர்ந்துள்ளேன்.

நான் என்னை பற்றி நிறைய தெரிந்து கொண்டேன். நான் எமோஷனலாகவும், மனதளவிலும் எவ்வளவு வலிமையானவள் என்பதை புரிந்து கொண்டேன். ஒவ்வொரு நாளையும் ரசித்து மகிழ்ச்சியுடன் வாழ விரும்புகிறேன்.

திருமணமாகி விவாகரத்தாகும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. அப்போது மனவலி அதிகமாக இருந்தது. ஆனால் தற்போது நானும், விஜய்யும் அவரவர் உலகில் மகிழ்ச்சியாக உள்ளோம்.


Post your comment





Related News
நிவின் பாலி ரசிகர்களே உங்களுக்கு இன்று ஒரு ஸ்பெஷல்
விஷ்ணு விஷால் - அமலா பால் படத்திற்கு அசத்தலான தலைப்பை கைப்பற்றிய படக்குழு
தனுஷ் படத்திலிருந்து விலகிய அமலா பால்- ஏன்?
பிரேமம் நாயகன் நிவின்பாலியின் சகாவு பட முதல்நாள் பாக்ஸ் ஆபிஸ் எவ்வளவு தெரியுமா?
அறிமுக இயக்குனர் படத்தில் நிவின்பாலியுடன் இணைந்த சிவகார்த்திகேயன் பட நாயகி
எங்க அண்ணன் ரஜினி பார்த்துக்கொள்வார்- கமல்ஹாசன் உருக்கம்
கைதான நிவின்பாலி பட இயக்குனர்- அதிர்ச்சியில் படக்குழு
நிவின் பாலியின் அதிரடி பிளான்!
கீர்த்தி சுரேஷ் எதிர்பார்க்க அமலா பாலுக்கு அடிக்குது ஜாக்பாட்?
இந்து வாலிபரை காதலிக்கும் அமலா பால்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions