
அமலாபால் அவரது காதல் கணவர் ஏ.எல்.விஜய்யை சமீபத்தில் பிரிந்தார். முறைப்படி விவாகரத்து கேட்டு இருவரும் கோர்ட்டில் மனு கொடுத்திருக்கிறார்கள்.
இப்போது அமலாபால் எப்படி இருக்கிறார் என்பதை அவரே சொல்கிறார்...
“நான் இஷா மையத்தில் கற்றுக் கொண்ட யோகா பயிற்சிகளை செய்து வருகிறேன். அது என் உடலையும், மனதையும் புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ள உதவுகிறது. தற்போது நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். உண்மையான மகிழ்ச்சி வெளியில் இருந்து வருவதில்லை. நமக்குள் தான் இருக்கிறது. எனக்கு நீண்ட தூரம் ஓடுவது பிடித்தமான ஒன்று. அதை செய்து வருகிறேன்.
என் சகோதரர் அபிஜிபால். அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் தான் எனக்கு மிகவும் ஆதரவாக இருக்கிறார். அவருடன் எப்போதும் இருக்க முடியாது. என்றாலும், அவர் இல்லாமலும் வாழ முடியாது.
இதுவரை எனக்கு நடந்தவை எல்லாம் ஆச்சர்யமாக இருக்கிறது. படங்களில் நடிக்க வந்தது, விவாகரத்து பெறுவது, ஏன் இந்த பேட்டி அளிப்பது கூட அந்த பட்டியலில்தான் அடங்கும்”
Post your comment