ஏ.எல். விஜய்யுடன் மீண்டும் சேர்வேனா?: அமலா பால் விளக்கம்

Bookmark and Share

ஏ.எல். விஜய்யுடன் மீண்டும் சேர்வேனா?: அமலா பால் விளக்கம்

இயக்குனர் ஏ.எல். விஜய்யுடன் மீண்டும் சேர்ந்து வாழ வாய்ப்பு உள்ளதா என்பது குறித்து நடிகை அமலா பால் தெரிவித்துள்ளார். ஆசை ஆசையாய் காதலித்து மணந்த கணவர் ஏ.எல். விஜய்யை அமலா பால் பிரிந்தார்.

கணவரை பிரிந்த பிறகு அவர் படங்களில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார். அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு படங்களை தவிர வேறு நினைப்பு இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.விஜய்யும், நானும் மீண்டும் சேர்ந்து வாழ்வோமா என்று தெரியவில்லை.

இதை எல்லாம் கணிக்க முடியாது. வாழ்வில் எதுவுமே நிலையானது இல்லை என அமலா கூறியுள்ளார்.நாம் ஒன்று நினைத்தால் வேறு ஒன்று நடக்கிறது. அதனால் வருவதை ஏற்றுக் கொண்டு போய்க் கொண்டிருக்க வேண்டும்.

நானும், விஜய்யும் வாழ்வின் வேறு நிலையில் சந்தித்திருந்தால் ஒன்றாக மகிழ்ச்சியாக வாழ்ந்திருப்போம் என்கிறார் அமலா.தற்போது நானும், விஜய்யும் வேறு வேறு நிலையில் உள்ளோம்.

இரண்டு அழகான நபர்கள் தவறான கதையில் சந்தித்துக் கொண்டதாகிவிட்டது எங்கள் வாழ்க்கை என அமலா தெரிவித்துள்ளார்.எனக்கு விஜய் மீது எந்த கோபமும் கிடையாது.

இன்னும் அவர் தான் எனக்கு பிடித்த நபர் என்று அமலா கூறியுள்ளார். அமலா நடிப்பு தவிர தற்போது பாட்டு பாடுவதிலும் கவனம் செலுத்துகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் - விஜய்யை வாழ்த்திய விஜயகாந்த்
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
சீனாவில் 10,000 தியேட்டர்களில் ரிலீஸாகும் விஜய்யின் மெர்சல்
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions