அமலாபாலுக்கு தமிழ் கற்றுக்கொடுக்கும் விஜய்!

Bookmark and Share

அமலாபாலுக்கு தமிழ் கற்றுக்கொடுக்கும் விஜய்!

மலையாளத்தில் இருந்து வந்து தமிழ் சினிமாவில் கோலோச்சிய நடிகைகளில் அமலாபால் குறிப்பிடத்தக்கவர். விகடகவி என்ற படத்தில் அறிமுகமான இவர், பின்னர் சிந்துசமவெளி படத்தில் நடித்து சர்ச்சை நடிகையானார்.

ஆனபோதும், அதன்பிறகு பிரபுசாலமன் மைனாவில் கொடுத்த வாய்ப்பு அமலாபாலின் இமேஜை டோட்டலாக மாற்றியது. அதனால் பின்னர் விக்ரம், விஜய் என்று மெகா ஹீரோக்களுடன் ஜோடி சேரும் வாய்ப்புகளை பெற்ற அமலாபால், டைரக்டர் ஏ.எல்.விஜய்யை காதலித்து திருமணமும் செய்து கொண்டார்.

அதையடுத்தும் மலையாளத்தில் நடித்து வருபவர் தமிழில் ஹைக்கூ என்ற படத்தில் ஒரு கேரக்டரில் நடிக்கிறார். மேலும், திருமணத்திற்கு முன்பு கேரளாவுக்கும், சென்னைக்கும் அலைந்து கொண்டேயிருந்த அமலாபால், ஏ.எல்.விஜய்யை திருமணம் செய்து கொண்ட பிறகு சென்னையிலேயே செட்டிலாகி விட்டார்.

ஆனபோதும், இன்னமும் சரியாக தமிழ் பேச வராமல் தடுமாறிக்கொண்டு வருகிறார் நடிகை. அதனால், தான் வீட்டில் ஓய்வாக இருக்கும் நேரங்களில் அவருக்கு தமிழ் வார்த்தைகளை பேச பயிற்சி கொடுக்கிறாராம் டைரக்டர் விஜய்.

அவர் மட்டுமின்றி அவர் வீட்டில் உள்ளவர்களும் இவர் மலையாளம் கலந்து பேசும் தமிழ் வார்த்தைகளை எப்படி தமிழில் உச்சரிப்பது என்றும் சொல்லிக்கொடுக்கிறார்களாம். ஆக, இன்னும் சில மாதங்களிலேயே கேரளத்து சேச்சியான அமலாபால், சுத்த தமிழ் பேசும் தமிழச்சியாக மாறி விடுவார் என்கிறார்கள்.


Post your comment





Related News
அடுத்த சன்னிலியோன் நீங்கதான் - அமலாபாலை விமர்சித்த ரசிகர்கள்
விஷாலை மிரள வைத்த அமலாபால்
எதுவாக இருந்தாலும் 2 நாள்தான் - அமலாபால்
மேயாத மான் இயக்குனருடன் இணையும் அமலாபால்..!
முதல் முறையாக தமிழுக்கு வரும் வட இந்திய கிரிக்கெட் பிரபலம் !!
இயக்குனர் விஜய்க்கு இரண்டாவது திருமணம்! பெண் யார்?
நம்மை பற்றி வரும் கிசுகிசுக்கள் நல்லது தான் - அமலாபால்
அமலாபால் நடிக்கும் "அதோ அந்த பறவை போல" ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட காஜல் அகர்வால் !
தொண்டு நிறுவனத்தை ஆரம்பித்த அமலாபால் - அதிர்ச்சியூட்டும் காரணம்.!
காதலில் விழுந்த அமலா பால் - வைரலாகும் புகைப்படம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions