பசங்க-2 வில் அமலாபாலின் கதாபாத்திரத்தில் முதலில் ஜோதிகா தான் நடிக்க இருந்தாராம்!

Bookmark and Share

பசங்க-2 வில் அமலாபாலின் கதாபாத்திரத்தில் முதலில் ஜோதிகா தான் நடிக்க இருந்தாராம்!

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா, அமலாபால், பிந்துமாதவி உட்பட பலர் நடித்திருக்கும் பசங்க2 படம் நன்றாகப் போய்க்கொண்டிருக்கிறதாம். அந்தப்படத்துக்கு எல்லாப்பக்கங்களிலிருந்தும் நல்ல வரவேற்பு கிடைத்துக்கொண்டிருப்பதாகவும் சொல்கிறார்கள். 

படம் நன்றாகப் போவதால் இயக்குநர் பாண்டிராஜக்கு, தயாரிப்பாளர் சூர்யா, ஒரு காரை பரிசாகக் கொடுத்திருக்கிறார். அந்தப்படத்தில் சூர்யாவின் மனைவியாகவும் பள்ளிஆசிரியையாகவும் நடித்திருக்கும் அமலாபாலுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.

அந்தப் பாத்திரப்படைப்பே வரவேற்புக்குரியதென்றாலும் தன்னுடைய நடிப்பால் அந்தப்பாத்திரத்துக்கு மேலும் வலிமை சேர்த்திருக்கிறார் அமலாபால் என்று எல்லோரும் சொல்கிறார்கள்.

அமலாபால் நடித்திருந்த வேடத்தில் நடிக்கச் சொல்லி முதலில் ஜோதிகாவிடம்தான் கேட்டார்களாம். அப்போது 36 வயதினிலே படவேலைகளும் இருந்ததால் இந்தப்படத்தில் நடிக்கவியலாது என்று ஜோதிகா சொல்லிவிட்டாராம்.

இப்போது படத்துக்கும் குறிப்பாக அந்த வேடத்துக்கும் கிடைக்கும் வரவேற்புகளைப் பார்த்து அதை மிஸ் பண்ணிவிட்டேன் என்று சொல்லி வருத்தப்பட்டுக்கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள். 


Post your comment





Related News
சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா
2.0 டீசர் விமர்சனம் - படத்தின் கதை இதுவா?
சதுரங்க வேட்டை 2 - சம்பள பாக்கி கேட்டு நடிகர் அரவிந்த்சாமி வழக்கு
‘பாகுபலி’யை மிஞ்சிய கிராபிக்ஸ் ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு, ரூ.542 கோடியாக உயர்ந்தது
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
ரஜினியின் 2.O டீசர் வெளியாகும் தேதி அறிவிப்பு
தனி ஒருவன் 2 - வில்லனாக நடிக்க உச்ச நடிகருடன் பேச்சுவார்த்தை
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
இந்தியன் தாத்தாவுக்காக உக்ரைன் செல்லும் கமல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions