பிருத்விராஜ் பிரதர்ஸ் நடிக்கும் 'அமர் அக்பர் ஆண்டனி'..!

Bookmark and Share

பிருத்விராஜ் பிரதர்ஸ் நடிக்கும் 'அமர் அக்பர் ஆண்டனி'..!

பிருத்விராஜும், இந்திரஜித்தும் சகோதரர்கள் என்பதும் தனித்தனி ஹீரோக்களாக படங்களில் நடித்து வருகிறார்கள் என்பதும் தெரிந்த விஷயம் தான். அதேசமயம் நல்ல ஸ்கிரிப்ட் கிடைக்கும்போது இருவரும் ஒரே படத்தில் இணைந்து நடிக்கவும் தயங்குவதில்லை.

இதுவரை அப்படி பத்து படங்களில் இணைந்து நடித்திருக்கிறார்கள்.. பத்தாவது படம் தான் ஆர்யா, பிருத்விராஜ், இந்திரஜித் கூட்டணியில் உருவாகி வரும் 'டபுள் பேரல்'. ஆனால் பதினொன்றாவது முறையாக இருவரும்  'அமர் அக்பர் ஆண்டனி' என்கிற படத்தில், அமர், அக்பராக இணைந்து நடிக்க இருக்கிறார்கள்.. மூன்றாவது ஆண்டனி கேரக்டரில் ஜெயசூர்யா நடிக்கிறார்.

'கிளாஸ்மேட்ஸ்' படத்தை தொடர்ந்து ஒன்பது வருடம் கழித்து இவர்கள் மூவரும் இணைந்து நடிக்கும் படம் இது. பாடகர், சின்னத்திரை நடிகர், காமெடி நடிகர் என பல அடையாளங்களுடன் வலம் வரும் நடிகர் நாதிர்ஷா இந்தப்படத்தின் மூலம் இயக்குனராக மாறுகிறார்.. கதாநாயாகியாக வேதிகா நடிக்க இருக்கிறார். ஏப்ரலில் படப்பிடிப்பை துவங்க இருக்கிறார்கள்.  


Post your comment





Related News
சினிமாவில் ஆணாதிக்கம் அதிகமாக உள்ளது - மியா ஜார்ஜ்
ட்விட்டரையே அதிர வைத்த தல ரசிகர்கள் - மிரட்டல் அப்டேட்.!
கருணாநிதி உடல்நலம் பற்றி மு.க.ஸ்டாலினிடம் கேட்டறிந்தார் நடிகர் விஜய் ஆண்டனி
விஜய் ஆண்டனி - அர்ஜுன் கூட்டணியில் விருவிருவென வளர்ந்து வரும் "கொலைகாரன்"
"எம். ஜி. ஆர்" திரைப்படத்தின் 'டீஸர்' வெளியீடு
பிரபல நடிகரின் படத்தில் இணைந்த கலக்கப்போவது யாரு காமெடி பிரபலம்! இந்த ஹீரோவின் தீவிர ரசிகராம்!
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
விசுவாசம் இசையமைப்பாளரின் அதிரடியான முடிவு!
நடனத்தை மையப்படுத்தி உருவாகும் லஷ்மி
மூன்று சூப்பர் ஹீரோக்கள் வெளியிட்ட '' வேட்டை நாய்'' டீசர் !








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions